நெப்போலியனுக்கு மறக்கமுடியாத சர்ப்பரைஸ் கொடுத்த நடிகர்.. பிறந்தநாளுக்கு இது சூப்பர் கிப்ட்!..

Published on: December 14, 2023
nepo
---Advertisement---

Actor Nepolean: தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே 60வயது முதியவராக நடித்தவர் நடிகர் நெப்போலியன். அப்பொழுது அவருக்கு வயது 22 இருக்குமாம். அந்த வயதில் முதியவராக நடிக்க ஒரு தைரியம் வேண்டும். துணிந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றார். அதுவும் வில்லனாக அறிமுகமாகி பின் ஹீரோவான நடிகர்தான் நெப்போலியன்.

அவரை ஹீரோவாக்கி அழகுபார்த்த படம் சீவலப்பேரி பாண்டி. அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை நெப்போலியனுக்கு பெற்றுத்தந்தது. அடுத்ததாக எட்டுப்பட்டி ராசா படமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுத்தந்தது. ஹீரோ மெட்டிரியல் இல்லை என்றாலும் மக்கள் நெப்போலியனை தங்களது ஆஸ்தான ஹீரோவாகவே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

இதையும் படிங்க: அஜித்துடன் சேர்ந்து போட்டோதானய்யா எடுத்தேன்! மூட்டைக் கட்டி மொத்தமா வழியனுப்பி வைத்த ‘விடாமுயற்சி’ டீம்

பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவரை இன்று வரை மக்கள் வல்லவராயனாகவேதான் பார்க்கிறார்கள். அதுவும் ரஜினிக்கு வில்லனாக எஜமான் படத்தில் அவர் நடித்த நடிப்பு இருக்கே? யாராலும் அதை தொட முடியாது. அதனால் தான் அந்த கதாபாத்திரம் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.

இப்படி தமிழ் நாட்டு மக்களுக்கு பிடித்த நடிகராக இருந்தாலும் தற்போது நெப்போலியன் செட்டிலாகி இருப்பது அமெரிக்காவில் தான். அதுவும் தன் மகனுக்காக அங்கேயே செட்டிலாகி விட்டார். அங்கே ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியை ஆரம்பித்து கிட்டத்தட்ட 1000 ஊழியர்களை வைத்து நிர்வகிக்கும் ஒரு சிறப்பான தொழிலதிபராக வாழ்ந்து வருகிறார் நெப்போலியன்.

இதையும் படிங்க: கடுப்பான பிக்பாஸ் டீம்.. மிட் வீக் எவிக்‌ஷனில் ஒரு ஆடு காலி… யாரு தெரியுமா?

அதுமட்டுமில்லாமல் விவசாயம் சார்ந்த பண்ணைகளையும் நடத்தி வருகிறார். சமீபத்தில்தான் நெப்போலியன் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த விழாவிற்கு அவர் கம்பெனி ஊழியர்கள், கோலிவுட்டில் இருந்து முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தாராம் நெப்போலியன். கிட்டத்தட்ட 1500 பேர் அவர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்களாம்.

அப்போது அனைவரையும் ஒவ்வொருத்தராக சந்தித்து போய் நெப்போலியன் பேச அந்தக் கூட்டத்தில் அழையா விருந்தாளியாக நடிகர் விதார்த்தும் அமர்ந்திருந்தாராம். அவரை பார்த்ததும் நெப்போலியனுக்கு அதிர்ச்சியாகி விட்டதாம். இருந்தாலும் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் என விதார்த் வந்ததை நெப்போலியன் மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டாராம்.

இதையும் படிங்க: வாடிவாசலில் எந்த மாற்றமும் இல்ல.. அந்த கதை அவருக்கு தான்.. ஷூட்டிங் குறித்த அப்டேட்டை சொன்ன வெற்றிமாறன்..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.