சூடுபிடிக்கும் சூர்யாவின் பாலிவுட் திரைப்படம்… ஹீரோயின் யாருங்கிறது தான் ஹைலைட்டே!... வெவரம் பாஸ் நீங்க
Surya: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் பாலிவுட் திரைப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டது. அதிலும் ஹீரோயின் குறித்த தகவலால ரசிகர்களும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.
கோலிவுட்டில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து ஹிட் கொடுத்தவர் சூர்யா. ஆனால் அவர் சில மாதங்களாகவே மும்பையில் வீடு எடுத்து செட்டில் ஆகிவிட்டார். குடும்ப பிரச்னை என பல கதைகள் சொன்னாலும் ஜோதிகா தன் அம்மா, அப்பாவுடன் இருக்க வேண்டும் என சமீபத்திய பேட்டியில் சொல்லி இருந்தாராம்.
இதையும் படிங்க: வாய்ப்பு கேட்ட விஜயகாந்த்.. சொல்லிக் கொடுத்த ராமராஜன்!.. இருவருக்கும் இடையில் இப்படி ஒரு உறவா?!..
அதை தொடர்ந்து, விஷயம் அதுமட்டுமல்ல இந்தி படத்திலும் சூர்யா கவனம் செலுத்த இருப்பதாகவும் விஷயம் கசிந்தது. இதையடுத்து சூர்யாவின் முதல் நேரடி இந்தி திரைப்படமான கர்ணா குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட முதற்கட்ட படப்பிடிப்பு பணிகளுக்கான வேலைகள் தொடங்கப்பட்டு விட்டதாம்.
கங்குவா படத்தின் ஷூட்டிங் முடிய இருக்கும் நிலையில், சூர்யா அடுத்து சுதா கொங்கரா படத்தில் இணையவேண்டும். ஆனால் அதற்கு முன்னர் பிப்ரவரி 15ல் இருந்து ஒரு வாரம் கர்ணா திரைப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு இருக்கின்றனராம். அதன் பின்னர் சுதா கொங்கரா படத்துக்கு வந்து விடுகிறாராம் சூர்யா.
இதையும் படிங்க: ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?
அதை முடித்துவிட்டே கர்ணா படத்தில் மீண்டும் இணைவராம். இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறாராம். நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் நடிகருடன் இணைந்து இருக்கிறார்.
பல மொழிகளில் ரிலீஸாக இருக்கும் பேன் இந்தியா படமாக கர்ணா உருவாக இருக்கிறது. இப்படத்தில் கர்ணனின் கதையை மையமாக உருவாகும் வரலாற்று கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என்னடா இன்னும் காணலயேனு பாத்தேன்! சத்யதேவ் இஸ் கம்பேக்.. வைரலாகும் அஜித்தின் நியூ லுக்