More
Categories: Cinema History Cinema News latest news

சின்ன கல்லு… பெத்த லாபம்… சூர்யா கேரியரில் கம்மி பட்ஜெட்டில் மாஸ் காட்டிய 5 திரைப்படங்கள்…

Surya: வாரிசு நடிகராக கோலிவுட்டுக்கு வந்தாலும் தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்தவர் நடிகர் சூர்யா. பெரிய நிறுவனங்கள் வேண்டாம். அவரை நம்பி களமிறங்கிய சின்ன பட்ஜெட் படங்கள் கூட பெரிய லாபம் பெற்றது. அப்படிப்பட்ட ஐந்து படங்களின் தொகுப்பு இங்கே.

பிதாமகன்: நடிகர் சூர்யாவின் நடிப்புக்கு தீனிபோட்ட திரைப்படம் பிதாமகன். இப்படத்தில் சூர்யாவுடன் விக்ரம், லைலா, சங்கீதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் கன்னடாவிலும் ரீமேக் செய்யப்பட்டது. 4 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் வசூல் 16 கோடி எனக் கூறப்படுகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: நல்லவேளை கலர்ல போடல!.. தலைவி வேறலெவல்!.. பில்லா பட எபெஃக்ட் காட்டும் நயன்தாரா…

அயன்: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படன் அயன். இப்படத்தில் சூர்யா, பிரபு, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் கதை பெரிய அளவில் பாசிட்டிவ் ரீச் பெற்றது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. 20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் வசூல் 72 கோடி எனக் கூறப்படுகிறது.

வேல்: ஹரி இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேல். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான எல்லா பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. படமும் வசூலில் சக்கை போடு போட்டது. தீபாவளி ரிலீஸில் இப்படம் வெளியானதும் படத்திற்கு பாசிட்டிவாக அமைந்தது. 8 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் வசூல் 31 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சின்ன பையனுடன் ’அந்த’ தொடர்பில் இருந்த சில்க் ஸ்மிதா… கடைசியில் நடந்தது தான் அதிர்ச்சி…

நந்தா: இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த முக்கிய திரைப்படம் நந்தா. இப்படத்திற்காக சூர்யா அதிக உடற்பயிற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. 78 லட்சம் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 8 கோடி அளவில் வசூல் சாதனை படைத்தது. 

கஜினி:  ஏ.ஆர்.முருகதாஸுக்கு மட்டுமல்லாமல் சூர்யாவுக்கும் பெரிய அளவில் ஹிட் படமாக அமைந்தது கஜினி. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். ஹரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து செய்து இருந்தார். படத்தினை இந்தியில் அமீர்கானை வைத்து முருகதாஸே இயக்கினார். 9 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 68 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts