சூப்பர்ஹிட் படம் கொடுத்த இயக்குனர்..! மரியாதை கொடுக்காமல் சூர்யா செய்த செயல்.. என்னங்க இதெல்லாம்?!

Published on: November 23, 2023
---Advertisement---

Surya: சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தினை கொடுத்த படம் என்றால் அது அயன் தான். அப்படத்தினை இயக்கியவர் கே.வி.ஆனந்த். அவரின் இறப்புக்கு பின்னர் அவர் குடும்பத்துக்கு சூர்யா செய்த அவமரியாதை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

சூர்யாவுக்கு மிகப்பெரிய மூன்று ஹிட் படங்களான அயன், மாற்றான், காப்பான் படங்களை கொடுத்தவர் கே.வி.ஆனந்த். அவருக்கும் சூர்யாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. மாற்றான் சமயத்தில் தமிழக உரிமையை வாங்கி இருந்தவர் ஞானவேல் ராஜா தான். அவர் படத்தின் நீளத்தினை ஆனந்திடம் கேட்காமல் கட் செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க: அப்படி மட்டும் பாக்காத!.. லுக்குல கிக்கு ஏத்தி சொக்க வைக்கும் மாளவிகா மோகனன்..

இதனால் அவருக்கு சூர்யா மீது வருத்தம் ஏற்பட்டதாம். அதனை தொடர்ந்து மாற்றான் படத்தின் போது மன்னிப் கேட்டு சமாதானமும் ஆகிவிட்டனர். அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையில் திடீரென கே.வி.ஆனந்த் உயிரிழந்தார். அவர் உடல் கூட வீட்டுக்கு கொடுக்கப்படவில்லை.

அப்போது வீட்டினரை நேரில் சந்தித்த சூர்யா நான் இருக்கேன். எந்த உதவி என்றாலும் என்னை கேளுங்கள் என பெருந்தன்மையாக சொல்லி இருந்தார். அவர்களும் அந்த நம்பிக்கையில் மகள் திருமணத்துக்கு நேரில் சென்று பத்திரிக்கை வைத்து இருந்தனர்.

இதையும் படிங்க: இவர்கள் கற்புக்கரசி கண்ணகியா?!.. மன்சூர் அலிகானுக்கு ஆதரவா களமிறங்கும் பயில்வான்…

பத்திரிக்கை வைக்கும் போதே சிவகுமார் தன்னால் வர முடியாது. ஆனால் சூர்யா சென்னையில் தான் இருப்பார். வந்துவிடுவார் என்பது போல தான் சொல்லி இருக்கிறார். ஆனால் கல்யாணத்துக்கு விஜய் சேதுபதி உள்ளிட்ட எல்லா நடிகர்கள் வந்தனர். 

சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய படைப்பை கொடுத்த இயக்குனரின் மகள் கல்யாணத்துக்கு வர தோன்றாமல் இருந்து விட்டார். அவர் முறையில் யாருமே வரவில்லை என்பது தான் வேதனை. இதை கே.வி.ஆனந்தின் நெருங்கிய நண்பரான சங்கர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.