ரெட்ரோ படம் நல்லா ஓடுவதற்காக சூர்யா செய்த மகத்தான செயல்… இப்பவாவது ஓடணும் கடவுளே..!

retro
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படமாவது ஓடாதா என்ற பெரும் எதிர்பார்ப்புடன் சூர்யா ரெட்ரோ மூலம் களம் இறங்கியுள்ளார். இந்தப் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். பீட்ஷா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இவரது படத்தில் திரைக்கதை தான் மிகவும் பேசப்படும். சாதாரண ஒன்லைன் கதையாகத் தான் இருக்கும். ஆனால் திரைக்கதையில் அங்கங்கே டுவிஸ்ட்டுகளை வைத்து ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்து விடுவார். அதனால் தான் இவரது படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ஆகின்றன.
ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம், நாசர் உள்பட பலரும் தங்கள் திறமையைக் காட்டியுள்ளனர். படத்தின் முதல் பாதி சூப்பர். 2ம் பாதி ஆக்ஷனில் அதகளம் ஆக இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.

இன்று மே. 1 உழைப்பாளர்கள் தினம். இந்த நன்னாளில் சூர்யா படம் ரிலீஸ் ஆகியுள்ளது. எத்தனையோ தொழிலாளர்கள் இன்று விடுமுறையில் இருப்பார்கள். படம் பார்க்க திரண்டு வருவார்கள். வேறு எப்போதும் இல்லாத வகையில் சூர்யா படத்துக்குக் கூட்டம் என்கிறார்கள். இந்தப் படத்தை சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
படத்திற்கு ஹைப் அதிகம். பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணனின் மியூசிக் செம. அதிலும் கனிமா பாடல் ட்ரெண்ட் செட். இந்தப் படத்தின் ரிலீஸ் ஆன இன்று சூர்யா செய்த ஒரு மகத்தான செயல் பற்றி லோகேஷ் கனகராஜ் இப்படி சொல்கிறார்.
சூர்யா சார் எத்தனையோ நல்ல காரியங்கள் செய்து கொண்டு இருக்கிறார். அதுல ஒண்ணு தான் இன்று காலை 10 ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டது. அந்த நல்ல காரியத்தில் ஒரு சின்ன பங்காக நான் இருந்தேன். அவ்வளவு தான். ரெட்ரோ வெளியீட்டை முன்னிட்டு நடிகர் சூர்யா ஏற்பாடு செய்த அன்னதானத்தை பச்சைக்கொடி காட்டி துவங்கி வைத்து லோகேஷ் கனகராஜ் சொன்னது தான் இது.