அந்த விஷயத்தில் தல, தளபதியையே ஓரங்கட்டிய சூர்யா… ரெட்ரோவின் மாஸைப் பாருங்க..!

ajith, surya, vijay
Retro: கங்குவா படத்தின் படுதோல்விக்குப் பிறகு சூர்யாவுக்கு வெளிவரும் படம் ரெட்ரோ. கார்;த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வருவதால் படம் ஹிட்டுதான் என்று ரசிகர்கள் ஆணித்தரமாக கூறி வருகின்றனர். அதே வேளையில் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர் தோல்வியையே சந்தித்த சூர்யாவுக்கு இந்தப் படமாவது கைகொடுக்குமா என்ற நிலை தான் இருந்து வருகிறது. ரெட்ரோ படவிழாவில் சிவகுமார் பேசிய சிக்ஸ் பேக் சர்ச்சை வேறு பூதாகரமாக வெடித்தது.
அந்த வகையில் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ்ராஜ், நந்திதா தாஸ், ஜார்ஜ் மரியன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் சூப்பர். குறிப்பாக கன்னிம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு. கார்த்திக் சுப்புராஜ் படங்களில் பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது. மே 1ல் அஜித்தின் பிறந்தநாள். அதே நாளில் தான் சூர்யா படம் வெளியாகிறது. இந்தப் படம் தற்போது ஒரு சாதனையைப் படைத்துள்ளது. என்ன தெரியுமா?
இங்கிலாந்தில் ரெட்ரோ படம் முதல் நாள் முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. அதாவது ரெட்ரோ படத்துக்கு 3200 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதற்கு முன் விஜயின் கோட் படத்துக்கே 3000 டிக்கெட்டுகள் தான் விற்றுள்ளன. அதே போல அஜித்தின் குட் பேட் அக்லிக்கும் 2700 டிக்கெட்டுகள் தான் விற்றுத் தீர்ந்துள்ளன.