ஜெய்பீம் சிறுமிக்கு சூர்யா கொடுத்த சர்ப்பரைஸ்...என்ன தெரியுமா?...

by பிரஜன் |   ( Updated:2021-11-04 00:55:29  )
alli
X

alli

ஜெய் பீம் அல்லிக்கு தங்க செயின் பரிசளித்த சூர்யா!

இருளர் இன மக்களின் ஒடுக்குமுறைகளை குறித்து வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெய் பீம். அமேசான் பிரைமில் வெளியான இந்த திரைப்படம் இருளர் இன மக்கள் குறித்தும் அவர்கள் சமூகத்தில் உள்ள பிற ஜாதியினர்களால் அவர்கள் ஒடுக்கப்படுவதை குறித்தும் உண்மை வரலாற்று கதையை கூறியிருக்கிறது.

இந்த படத்தில் இருளர் இன ஒடுக்கப்பட்ட பெண்ணாக நடிகை லிஜோமல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர். அவர்களின் மகளாக அல்லி என்ற சிறுமி நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இதையும் படியுங்கள்: அண்ணாத்த வெற்றியா தோல்வியா? டிவிட்டரில் ரசிகர்களின் கருத்து இதுதான்…

அந்த சிறுமி கிளைமாக்ஸ் சீனில் சூர்யாவுடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து செய்தித்தாள் படிக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் படத்தில் நடித்த அனுபவங்களை குறித்து கூறியுள்ள அவர், தனக்கு சூர்யா அங்கிள் தங்க செயின் பரிசளித்ததாக கூறி நெகிழ்த்ந்தார்.

Next Story