Categories: latest news

எண்ணியது எண்ணியபடி.. சொல்லியது சொல்லியபடி! ‘வாடிவாசல்’ வாகைசூடும்.. என்ன மேட்டர் தெரியுமா?

Vadivasal Movie: சூர்யா நடிப்பில் வாடிவாசல் வருமா வராதா என்பதுதான் பல பேரின் கேள்வியாக இருந்துவருகிறது. கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்ட இந்த ப்ராஜக்ட் இன்னும் செல்ஃப் எடுக்காமல் கிடப்பிலேயே இருக்கின்றது. இதற்கிடையில் சூர்யா கங்குவா திரைப்படத்தில் பிஸியாக இந்தப் பக்கம் வெற்றிமாறன் விடுதலை 1 மற்றும் 2 என அதில் பிஸியாகி விட்டார்.

இருந்தாலும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள படமாக வாடிவாசல் திரைப்படம் அமைந்தது. வாடிவாசல் படத்திற்காக சூர்யா சொந்தமாக ஒரு காளையை வாங்கி அதுனுடன் பழகி வந்தார். அது சம்பந்தமான பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ஆனால் படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வராத நிலையில் பல வதந்திகள் வெளியாகின.

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் எம்ஜிஆர் – சிவாஜிக்கே முன்னோடியாக இருந்த ஜெய்சங்கர்..!

வாடிவாசலில் அமீர் நடிப்பதால் கார்த்திக்கும் அமீருக்கும் இடையே இருந்த பிரச்சினையால் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க மாட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் அதெல்லாம் பொய் என்பது போல் திடீரென சூர்யாவும் வெற்றிமாறனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் அடைந்ததாகவும் சூர்யா அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த விமர்சனத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது இணையத்தில் வாடிவாசல் பற்றிய ஒரு செய்தி டிரெண்டிங்கில் போய்க் கொண்டிருக்கின்றது. வாடிவாசல் திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும் அதில் கண்டிப்பாக சூர்யாதான் நடிக்க இருப்பதாகவும் வேறு எந்த நடிகரும் வாடிவாசலுக்குள் வர முடியாது என்றும் செய்திகள் பரவிக் கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: பாக்க பாக்க என்னமோ பண்ணுது!.. வீக் எண்டில் வெறியேத்தும் ரேஷ்மா!..

இதே போல் சித்ராலட்சுமணனும் வாடிவாசலில் இருந்து சூர்யா விலகி விட்டார் என்பதை வெற்றிமாறன் சொன்னாரா? இல்லை சூர்யாதான் அறிவித்தாரா? அதுமட்டுமில்லாமல் படத்தின் தயாரிப்பாளரான தாணுதான் சொன்னாரா? அதனால் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியிருந்தார். இதில் இருந்தே வாடிவாசலுக்குள் சூர்யாதான் கால் எடுத்து வைப்பார் என்று தெரிகிறது.

அதோடு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பே வெளியான தாணுவின் பதிவும் இப்போது வைரலாகி வருகின்றது. அதில் எண்ணியது எண்ணியபடி.. சொல்லியது சொல்லியபடி.. வாடிவாசல் வாகை சூடும் என்றும் சூர்யாதான் நடிப்பார் என்றும் அதில் பதிவிட்டிருந்தார். அதனால் சொன்ன சொல்லில் இருந்து தாணு மாறமாட்டார் என சூர்யாவின் ரசிகர்கள் பொறுமையுடன் காத்துக் கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: எம்ஜிஆரை வச்சு படம் எடுத்தா விளங்குமா? இயக்குனருக்கு வந்த சிக்கல்.. எப்படி சமாளிச்சார் தெரியுமா?

Rohini

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

10 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

17 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

18 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago