சூர்யா படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு.... அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.....

by adminram |
சூர்யா படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு.... அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.....
X

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான நான்கு படங்களை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியது. இதில் முதல் படமான இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இதனையடுத்து ஜோதிகா, சசிகுமார் நடித்திருக்கும் உடன்பிறப்பே படம் ஆயுபூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

மேலும் சூர்யா நடித்திருக்கும் ஜெய் பீம் படம் நவம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ள சூர்யா ஆதிவாசிகளுக்கு எதிரான வழக்கில்ஆஜராகி நீதியை நிலைநாட்டுவது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம். கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி உள்ளார்.

jai bhim

இந்நிலையில் இப்படத்தை பார்த்த தணிக்கைக்குழு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க தகுந்த ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. பொதுவாக வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் அதிகமாக இருந்தால் மட்டுமே ஏ சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் இப்படத்திற்கு எதன் அடிப்படையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என தெரியவில்லை.

இருப்பினும் ஜெய் பீம் படம் திரையரங்கில் வெளியானால் குழந்தைகள் பார்க்காமல் தடுக்கலாம். ஆனால் இப்படம் ஓடிடியில் வெளியாவதால் 18 வயதிற்குட்பட்டவர்கள் படத்தை பார்த்தாலும் தணிக்கைக்குழுவால் அதனை கண்காணிக்கவோ, தடுக்கவோ முடியாது என்பதே உண்மை. அப்படி இந்த படத்தில் என்ன உள்ளது என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story