ஜோதிகா, சூர்யாவுக்கே இந்தப் பிரச்சனைங்கறாங்க... என்ன சொல்கிறார் பிரபலம்?
ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவு அறிக்கையைத் தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளை வாரிக் கட்டிக்கொண்டு சொல்ல சமூக வலைத்தளத்துக்கு வந்து விட்டார்கள். அந்த வகையில் இங்கு ஒரு பிரபலம் யூடியூபில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
கணவன் இரவானாலே சாதாரண நபரா இருந்தாலும் ஏதாவது ஈசிஆர்ல ஒரு பார்ட்டி. டிஸ்கொத்தே அது இதுன்னு. அப்போ கோடிகளை வைத்து இருப்பவர்களுக்கு 5 ஸ்டார் ஓட்டல் தான் வாசம். நிறைய கிளப் இருக்கு.
ஜிம்கானா கிளப் இருக்கு. வசதி படைத்த இருபாலரும் ஒன்று கூடுவது தான் கலாச்சாரம். அவங்களுக்கு இது சாதாரணம். வசதி இல்லாதவர்கள் சினிமா, கோயில் போவாங்க. வசதி படைத்தவர்கள் சினிமா, கோவிலைத் தாண்டி 5 ஸ்டார் ஓட்டல். இதைத் தாண்டி ஈசிஆர்ல 100க்கும் மேற்பட்ட ரெஸ்டாரண்டுகள் இருக்கு. குறைந்தது 100 வசதி படைத்தவர்கள் இருப்பாங்க.
மாதம் முழுவதும் இரவு டின்னர் நடந்துக்கிட்டே இருக்கும். இரவு முழுவதும் கூடி கும்மாளம் அடிப்பது, ராக் இசை, நல்ல சமையல்னு நடக்கும். இதுல என்ன நடக்குதுன்னா ஒரு பெண்ணுக்கு ஆணும், ஒரு ஆணுக்கு பெண்ணும் பழக்கமாகும். கணவன் ஒரு விருந்துக்குப் போவான். மனைவி ஒரு விருந்துக்குப் போவார். இதுல கணவனுக்கு பெண் நண்பர்.
மனைவிக்கு ஆண் நண்பர். இது எல்லை மீறியும் போகலாம். ஈகோ பிரச்சனை. ஆனால் நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கு. ஆண் என்ன வேணாலும் பண்ணுவான். பெண் வாசலைத் தாண்ட மாட்டாள். ஆனால் சினிமா கல்ச்சரில் ஆண் ஒரு ஆடி கார், பெண் ஒரு ஆடி காரில் போவாங்க. ஏன்னா பல பிரச்சனைகளுக்கு ஈகோ தான். உங்கிட்டயும் 100 கோடி இருக்கு. எங்கிட்டயும் 100 கோடி இருக்கு. இங்கு பணம் பிரச்சனை இல்லை. ஈகோ தான். இது போன்ற கல்ச்சரில் மிகப்பெரிய சந்தேக வளையம் வருது. அடுத்த வினாடியே டைவர்ஸ். பெண் கேட்பாள் என்னோட சுதந்திரத்தில் எப்படி தலையிடலாம்னு.
அதே மாதிரி ஆணும் இன்னொரு பெண்ணுடன் சுற்றும்போது கேட்பான். இதுதான் விவாகரத்துக்கு காரணம்.ஆயா குழந்தைகளைக் கவனித்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து விடுவாள். அதனால் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் தொடர்பு இருக்காது. எல்லாம் போனில் தான் பேசுவார்கள். இதன் விளைவு தான் கல்யாணம் ஆகி 2 வருஷத்துக்குள்ள டைவர்ஸ். ஐடி பீல்டும் இப்படித் தான் நடக்கிறது. கல்யாணம் பண்ணிட்டு ஜோதிகா, சூர்யாவுக்கே இந்தப் பிரச்சனைங்கறாங்க.
Also read: கவுண்டமணி இல்லன்னா நான் நடிக்கலன்னு சொல்லி சாதித்த ராமராஜன்… என்ன படம்னு தெரியுதா?
நான் குழந்தைகளைப் படிக்க வைக்கிறதுக்குப் பம்பாய் போறேன்னு அங்கேயே செட்டிலாகிட்டாங்க. சிவக்குமார் ஓட்டல்ல சாப்பிடுறாருன்னு சொல்றாங்க. அப்போ சுதந்திரம் என்பது குழந்தைகளின் எதிர்காலத்துக்குள் கட்டுப்படணும். ஜெயம் ரவி, ஆர்த்தி பிரச்சனையைப் பற்றி கேட்டால் இப்படி சொல்கிறார்.
2 படம் ஹிட்டாச்சுன்னா இவர்கள் கற்பனா உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். இவர்கள் யதார்த்த வாழ்க்கையில் இருந்து விலகி விடுவார்கள். அதனால் மனைவியிடம் இருந்து அவ்வப்போது அனுமதி வேண்டுமா என பிரிந்து விடுகிறார்கள். குழந்தை, குட்டி, அம்மா, அப்பா என்ற தொடர்பு வளையத்தில் இருந்து வெளியே போய்விடுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட வீடியோ லிங்கை சொடுக்கவும்.https://www.youtube.com/watch?v=Uj93J1hvZIg