சூர்யா சினிமாவை விட்டு விலகுகிறாரா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

surya
Surya: சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் சூர்யா நடித்தார். படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்தப் படத்தில் சூர்யா ஏன் நடித்தார்? இப்படி ஒரு கதையை ஏன் தேர்ந்தெடுத்தார்னு எல்லாம் பலரும் விமர்சனம் செய்தனர். இப்போ ஒரு படி மேல் போய் சூர்யா சினிமாவை விட்டு விலக இருப்பதாகவும் சொல்லப்படுகிறதாம். இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க.
ரெட்ரோ சாதாரண ஒரு வரிக்கதை தான். அதை ஏன் சுத்தி வளைச்சி சொல்லணும்? பேட்ட படத்துல ரஜினியை வச்சி அவ்வளவு சூப்பரா எடுத்துருந்தாரு. ஆனா கார்த்திக் சுப்புராஜ் ஏன் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தாரு? ரஜினி, விஜய், சிம்பு எல்லாருக்கும் போய்ட்டு வந்த கதைதான் இந்த ரெட்ரோ.
சூர்யா ஏன் புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கறீங்க? எத்தனையோ இளைஞர்கள் நல்ல கதையோடு வாய்ப்பு தேடி அலைஞ்சிக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில் சூர்யா சினிமாவை விட்டுக் கிளம்பிப் போகப்போறாருன்னு ஒருத்தர் பேசிக்கிட்டு இருந்தாரு. எனக்கு பெரிய ஆச்சரியமா இருந்தது. அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. எதற்கும் துணிந்தவன் படத்துக்கு முன்னாடி சிங்கம் தான் ஹிட். எதற்கும் துணிந்தவன் எதிர்பார்த்து வெற்றி பெறாத படம். அவர் ரொம்ப ஓவர் ஆக்டிங் பண்றதா சொல்றாங்க.
ஆரம்பத்துல சூர்யாவுக்கு ரொமான்ஸ் வராது. ஆக்ஷன் வராதுன்னு பலரும் சொல்ல அவர் தனது உழைப்பால் முன்னேறினார். நந்தா என்ற படத்தில் நடித்து கடகடன்னு மேலே ஏறி வந்தார். உடலை வருத்தி நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்தவர் தான் சூர்யா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் ரெட்ரோவைப் பொருத்தவரை பெரிய அளவில் படம் பிளாப் என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல வசூல் தான் என்று தயாரிப்பு நிறுவனமே தெரிவித்துள்ளதாம். கடந்த ஒரு வாரமாக ரெட்ரோவின் வசூல் இந்திய அளவில் மட்டும் 50 கோடியை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் பட்ஜெட் 65 கோடி. உலகளவில் படத்தின் வசூல் 78 கோடி என்றும் தெரிய வருகிறது. இது போக ஓடிடி, சேட்டிலைட் உரிமை எல்லாம் இருக்கு. அப்படிப் பார்த்தால் படம் லாபம் தான் என்றே தெரிகிறது.