Connect with us

Cinema History

காக்க காக்க படத்துக்கு கௌதம் வைக்க ஆசைப்பட்ட பெயர்..! அதுவே செமையா இருக்குமே!

Kakka Kakka: நடிகர் சூர்யா நடிப்பில் ஹிட் அடித்த படம் காக்க காக்க. இப்படத்திற்கு கௌதம் மேனன் முதலில் வேறு பெயரை தான் தயாரிப்பாளரிடம் சொன்னாராம். ஆனால் அதற்கு அவர் ஓகே சொல்லாமல் போனது தான் ஆச்சரியமே.

கௌதம் வாசுதேவ் மேனன், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டுகள் எப்படி கேங்க்ஸ்டர்களை சுடுகிறார்கள். இதனால் அவர்கள் குடும்பம் பாதிக்கப்படுவது குறித்து படித்த கட்டுரைகளால் இன்ஸ்பிரேஷன் ஆகி இருக்கிறார். அதை தொடர்ந்தே இந்த படத்தினை உருவாக்கினாராம். 

இதையும் படிங்க: ஜெயிலர் பக்கா உப்மா… அதுக்கு லியோவே பரவாயில்லை தான்… பிரபல விமர்சகரின் தடாலடி..!

சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் மாதவன், அஜித்குமார் மற்றும் விக்ரம் ஆகியோரை கேட்டு இருக்கின்றனர். அவர்களால் சில காரணங்களால் பண்ண முடியாமல் போனதாம். அதை தொடர்ந்து ஜோதிகா தான் சூர்யாவை பரிந்துரை செய்தாராம். நந்தாவில் அவர் நடிப்பை பார்த்த பின்னரே ஓகே சொன்னாராம்.

பட்ஜெட் பிரச்னையால் பலர் இந்த படத்தினை தயாரிக்க முன் வரவே இல்லையாம். கடைசியில் படத்தை தயாரிக்க தாணு ஒப்புக்கொண்டார். படத்திற்கு ஆரம்பத்தில் பாதி என்று பெயரிடப்பட்டதாம். பின்னர் காலம் என மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து கௌதம் மேனன் தன் உதவியாளர்களை அழைத்து வித்தியாசமான தமிழ்த் தலைப்பை கேட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் போன் பண்ணி திட்டினாரு!.. வருத்தப்பட்டு பேசிய லலித் – எப்படி போக வேண்டிய படம்?

அப்போது மேனனிடம் அசோசியேட்டாக இருந்த மகிழ்திருமேனி ‘தடையற தாக்க’ என எழுதி கொடுத்தார். அந்த டைட்டிலை பார்த்த கௌதமிற்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் தாணுவிற்கு அது பிடிக்கவில்லையாம். அதன் பின்னரே, ‘காக்க காக்க’ என மாறியதாக கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top