Surya: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்துக்கான வேலைகள் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில் அதன் அப்டேட்கள் தொடர்ச்சியாக இணையத்தில் கசிய தொடங்கி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றி நாயகனாக இருந்தவர் நடிகர் சூர்யா. அவர் நடிப்பில் கடைசியாக ரிலீஸான படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூரரைப் போற்று ஆஸ்கார் விருது பட்டியல் வரை சென்றுவந்தது. விக்ரம் திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டும் ரோலக்ஸாக வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
இதையும் படிங்க: வாய் இருக்குங்கிறதுக்காக இப்படியெல்லாமா பேசுவீங்க? திடீரென ஜிவி போட்ட பதிவு.. ரொம்ப நொந்துட்டாரே
இதையடுத்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் தமிழில் ரிலீஸாகவில்லை. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறாது. படத்தின் வெற்றிக்காக எதிர்பார்ப்பை அதிகரிக்காமல் படக்குழு அமைதி காக்கிறது.
இந்த வருடத்தின் இரண்டாம் பாகத்தில் படம் ரிலீஸாக வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து சூர்யா வாடிவாசல், புறநானூறு என தமிழ் படங்கள் இருந்தாலும் பாலிவுட்டில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதில் அவர் நடிக்க இருக்கும் பிரம்மாண்ட படத்தினை ராக்கேஷ் ஓம் பிரகாஷ் இயக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கி இருக்கிறது. படத்தின் சண்டை காட்சிகளுக்காக நிக் போவெல் படக்குழுவில் இணைந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: நீங்க உருட்டுறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்… சிறகடிக்க ஆசையால் கோபத்தில் ரசிகர்கள்!…
இவர் ஏற்கனவே ஆர்ஆர்ஆர் படத்தில் பணிபுரிந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் நிறைய வாள் சண்டை காட்சிகளுக்காக சூர்யா பிரத்யேகமாக பயிற்சி எடுக்க இருக்கிறாராம். இப்படத்தினை 600 கோடி பட்ஜெட்டில் பாகம் 1 மற்றும் இரண்டு என பிரித்து இயக்க இருக்கின்றனர். தமிழ் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…