மொத்தமா கலைச்சி விட்டாச்சி… புறநானாறு படத்தில் இத்தனை மாற்றமா?

by Akhilan |   ( Updated:2024-08-27 02:18:17  )
மொத்தமா கலைச்சி விட்டாச்சி… புறநானாறு படத்தில் இத்தனை மாற்றமா?
X

#image_title

Purananooru: சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படத்தில் தற்போது மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சுதா கொங்கரா மற்றும் சூர்யா கூட்டணியில் ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படம் சூரரைப் போற்று. ஓடிடியில் வெளியான படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆஸ்கார் விருது வரை சென்று புகழ்பெற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கூட்டணி மீண்டும் புறநானூறு படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வசூலை அள்ளும் வாழை, டிமான்ட்டி காலனி 2…. 4 நாள் வசூல் இவ்வளவு கோடியா?….

சூர்யா, நஸ்ரியா, துல்கர் சல்மான், விஜய் வர்மா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படத்தை 2டி என்டர்டைன்மெண்ட் தயாரிக்க இருந்ததாகவும், ஜி வி பிரகாஷ் இசையமைப்பு செய்ய இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sivakarthikeyan

இந்நிலையில், தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் சூர்யாவின் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. கங்குவா திரைப்படத்தை முடித்துக் கொண்டு சூர்யா 44 படத்தில் உடனே இணையறுக்கிறார். அதே நேரத்தில் பாலிவுட் திரைப்படத்திலும் நடிக்க இருப்பதால் புறநானூறு திரைப்படத்திலிருந்து சூர்யா விலகி இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: தொலஞ்சி போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சிடுச்சி போல!.. ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்!..

சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகும் இப்படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். 2டி என்டெர்டைன்மெண்டும் இப்படத்திலிருந்து விலகுவதால் விரைவில் புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டைட்டிலிலும் மாற்றம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Next Story