இருமடங்கான சூர்யா சம்பளம்…. அப்படின்னா வாடிவாசலுக்கு மீண்டும் சிக்கலா?

by sankaran v |   ( Updated:2025-05-05 06:52:30  )
vadivasal and vetrimaran
X

vadivasal and vetrimaran

Vadivasal: வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். இந்தப் படத்திற்காக சூர்யா ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றுடன் 6 மாதமாக பழகி வருகிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் படம் திடீர்னு டிராப் ஆனது. அதன்பிறகு இப்போது மீண்டும் வரும் என்கிறார்கள்.

ஏற்கனவே வாடிவாசல் படம் நீண்ட நாள்களாக இழு இழுன்னு இழுத்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வாடிவாசலுக்கு இப்போது இப்படியும் ஒரு சிக்கல் வந்தால் அவ்ளோதான். இன்னும் நீண்டநாளாக கிடப்பில்தான் போடப்படும் என்றும் நெட்டிசன்கள் சொல்கிறார்கள். வாங்க அப்படி என்னதான் பிரச்சனைன்னு பார்ப்போம்.

வெற்றிமாறனுக்கும், சூர்யாவுக்கும் சில பிரச்சனைன்னு சொன்னாங்க. ஆனா அதுக்கு அப்புறம் ஸ்கிரிப்டை வெற்றிமாறனே சூர்யாவுக்குக் கொடுத்துட்டாராம். அதுக்கு அப்புறம் எந்தத் தடையுமே கிடையாது. அதே நேரம் ஸ்கிரிப்டைப் படிச்சிட்டு இதை மாத்துங்க. அதை மாத்துங்கன்னு சொல்லாம இருக்கணும் என்கிறார்கள். ஆனா இப்போ இருக்கிற நிலைமையில இப்படி எல்லாம் சொல்ல மாட்டாரு சூர்யா என்றும் சொல்கிறார்கள்.

2019ல் வாடிவாசலுக்கு கமிட்டாகி விட்டார். அப்போ சூர்யாவின் சம்பளம் 30 கோடி. ஆனால் இன்று அவரது சம்பளம் 60 கோடி. ரெட்ரோவுக்குப் பிறகு சித்தாரா என்டர்டெயின்மென்ட்டுக்கு வெங்கி அட்லூரி இயக்கத்தில் படம் பண்ண இருக்கிறார். அந்தப் படத்துக்கு பேசப்பட்ட சம்பளம் 60 கோடி. அப்படி இருக்கும்போது வாடிவாசல் 30 கோடிக்கு கமிட் ஆனதனால அந்த சம்பளத்துக்கு இப்போ வருவாரா?

இல்ல சூர்யா இப்போ வாங்குற 60 கோடியைத் தாணு கொடுப்பாரான்னு கேள்வி எழுகிறது. அதே நேரம் இவ்ளோநாளா பெரிய தொகையை அட்வான்ஸா கொடுத்து இருப்பதால் பழைய சம்பளத்தைத் தான் கேட்பாருன்னும் சொல்றாங்க. ரெட்ரோ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் 65 கோடிக்குத் தான் போயிருக்கு. ஆனா வெங்கி அட்லூரி படத்துக்கு 85 கோடி வரை போயிருக்கு.

#image_title

அதனால தான் சூர்யாவுக்கு சம்பளம் 60 கோடியாக ஆனதாம். அதே நேரம் ஆர்ஜே பாலாஜியின் டிஜிட்டல் ரைட்ஸ் இன்னும் விற்கவே இல்லை. ஆனா வெங்கி அட்லூரியின் லக்கி பாஸ்கர் படத்திற்கு நல்ல லாபம் கிடைத்ததால் தான் டிஜிட்டல் ரைட்ஸ் இப்போது அதிக விலைக்குப் போயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Next Story