ரோலக்ஸாக மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் சூர்யா… ஆனா ஹீரோ அவர் இல்லையாம்!...

by Akhilan |
ரோலக்ஸாக மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் சூர்யா… ஆனா ஹீரோ அவர் இல்லையாம்!...
X

Surya: நடிகர் சூர்யா தன்னுடைய நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ரோலக்ஸ் கேரக்டரில் மீண்டும் நடிக்க இருக்கிறார். ஆனால் அது முழு நீள படம் என்பது குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகர் சூர்யா. தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் சில வருடங்களாக அவருடைய நடிப்பில் எந்த ஒரு படத்தினையும் இதுவரை வெளியிடாமல் இருக்கிறார். கடைசியில் அவர் நடிப்பில் அதிக வரவேற்பை பெற்றது ரோலக்ஸ் கேரக்டர் தான்.

இதையும் படிங்க: இயக்குனர் மட்டும்தான் திரைக்கதை அமைப்பாரா? இளையராஜாவின் சோகப்பாடலில் இத்தனை புதுமையா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமல் போதை பொருள் க்ரூப்பை காலி செய்வார். அப்படி விஜய் சேதுபதியை க்ளோஸ் செய்ய அவரின் தலைவராக படத்தில் ரோலக்ஸ் கேரக்டர் சொல்லப்பட்டு இருக்கும். கடைசி வரை எண்ட்ரி கொடுக்காத அந்த கேரக்டர் கிளைமேக்ஸ் முடிந்து சில நிமிடங்கள் தோன்றும்.

கடைசி 5 நிமிடங்கள் மட்டுமே வரும் ரோலக்ஸாக நடிகர் சூர்யா நடித்து இருப்பார். அந்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸை முழுநீள படமாக எடுக்க இருக்கிறார்கள் எனவும் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது லோகேஷ் கூலி திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இதையும் படிங்க: எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத இந்தியன் படத்தின் அந்தக் காட்சி… அடுத்தடுத்த பாகத்திலும் தொடருமா?

இப்படத்தில் லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ரோலக்ஸாக சூர்யா மீண்டும் எண்ட்ரி கொடுக்கிறார். ஆக லோகேஷ் சூர்யாவை வைத்து இரண்டு படங்களை இயக்க இருக்கிறார். இதுகுறித்து மேலும் சில அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story