Cinema History
அட்டகாசமாக உருவாகி வரும் கங்குவா!.. கதையே சும்மா மிரட்டலே இருக்கே!.. கண்டிப்பா ஹிட்டுதான்!..
சூர்யா நடிப்பில் விறுவிறுப்பாகத் தயாராகி வரும் படம் கங்குவா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. படத்தை ஞானவேல் ராஜாவின் தயாரிக்க, சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.
கங்குவா படத்தைப் பார்த்ததும் அதன் ரிலீஸ் குறித்து மிகவும் மகிழ்ந்தாராம் சூர்யா. சில திருத்தங்களையும் சொன்னாராம். படத்தில் விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதே போல தெலுங்கு விநியோகிஸ்தர்கள் மத்தியிலும் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. அதிக விலைக்கும் வாங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யாவின் கங்குவா படம் தெலுங்கு உள்பட 38 மொழிகளில் வெளியாக உள்ளது. டீசர் மற்றும் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமைக்காக ரூ.22 கோடிக்கும் மேல் எதிர்பார்க்கிறார்களாம்.
படத்தில் சூர்யா ஒரு புதிய அவதாரமாக உருவெடுத்துள்ளார். படத்திற்கு தகுந்தாற்போல தன் உடலேயே வருத்தி அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் நடிகர் சூர்யா. இவரது அட்டகாசமான நடிப்பையும் படத்தில் எதிர்பார்க்கலாம். கஜினி, சிங்கம் போன்ற படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்தப் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
1678ல் ஒரு போர்வீரன் நோயால் இறந்து விடுகிறான். ஒரு பெண் அந்தப் போர்வீரனைத் தாக்கிய நோய் குறித்து ஆராய்ச்சி செய்கிறாள். கங்குவா என்றால் நெருப்பில் பிறந்தவன் என்று பொருள். படத்தில் 20 சதவீத வரலாறு, 80 சதவீத கற்பனை கலந்த படம். பண்டைய கால இறைவழிபாடு, கலாச்சாரம் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடித்த வரலாற்று படம் ஏழாம் அறிவு. செம மாஸ் ஆக இருந்தது. இந்தப்படத்தில் அட்டகாசமான கதை, சண்டை, பாடல்கள், பழங்கால கலாச்சாரம், தமிழனின் பெருமை என அருமையாக எடுத்துச் சொல்லப்பட்டது. இதே போல பண்டைய வரலாற்றை எடுத்துச் சொல்லும் படமாக இருப்பதால் கங்குவா படத்திற்கும் மாஸான வரவேற்பு கிடைத்துள்ளது.