20 முறை சூர்யாவுடன் மோதிய சியான் விக்ரம் படங்கள்!... அதிக தடவை ஜெயித்த ஹீரோ யாரு தெரியுமா?..
சூர்யா, விக்ரம் இருவருமே மிகச்சிறந்த நடிகர்கள். எடுத்துக்கொள்ளும் கேரக்டர்கள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்கு ரொம்பவே மெனக்கெடுபவர்கள். அவர்கள் நடித்த படங்களைப் பார்த்தாலே தெரியும். அந்த வகையில் இவர்களுடைய படங்களுக்குள் மோதல் என்றால் எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்.
முதன் முறையாக 1998ல் சூர்யாவின் காதலே நிம்மதி, விக்ரமின் கண்களின் வார்த்தைகள் படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே பிளாப். 2001ல் சூர்யாவுக்கு நந்தா படமும், விக்ரமுக்கு காசி படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே சூப்பர்ஹிட். 2002ல் விக்ரமுக்கு ஜெமினி படமும், சூர்யாவுக்கு உன்னை நினைத்து படமும் ரிலீஸ். இதுல விக்ரம் தான் வின்னர்.
2002ல் விக்ரமுக்கு சாமுராய், சூர்யாவுக்கு ஸ்ரீ படமும் ரிலீஸ். இதுல விக்ரம் தான் வின்னர். அதே ஆண்டில் விக்ரமுக்கு தூள் படமும், சூர்யாவுக்கு மௌனம் பேசியதே படமும் ரிலீஸ். இதுல விக்ரம் தான் வின்னர். 225 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
2003ல் விக்ரமுக்கு சாமி படமும், சூர்யாவுக்கு காக்க காக்க படமும் ரிலீஸ். இருபடங்களிலுமே கதாநாயகர்கள் போலீஸ் கெட்டப் தான். இதுல ரெண்டுமே ஹிட். என்றாலும் விக்ரம் தான் வின்னர்.
2004ல் விக்ரமுக்கு அருள் படமும், சூர்யாவுக்கு பேரழகன், ஆய்த எழுத்து படமும் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 2005ல் விக்ரமின் அந்நியன், சூர்யாவுக்கு கஜினி படம் ரிலீஸ். ரெண்டுமே செம மாஸ் ஹிட் ஆனது. 2 பேருக்குமே ரொம்ப வித்தியாசமான கேரக்டர்கள். அதனால இருவருமே வின்னர் தான்.
2005ல் சூர்யாவுக்கு ஆறு படமும், விக்ரமுக்கு மஜா படமும் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 2007ல் சூர்யாவுக்கு வேல் படமும், விக்ரமுக்கு பீமா படமும் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 2009ல் விக்ரமுக்கு கந்தசாமி படமும், சூர்யாவுக்கு ஆதவன் படமும் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர்.
2010ல் விக்ரமுக்கு ராவணன், சூர்யாவுக்கு சிங்கம் படமும் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 2011ல் விக்ரமுக்கு ராஜபாட்டை, சூர்யாவுக்கு 7ம் அறிவு ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 2012ல் சூர்யாவுக்கு மாற்றான், விக்ரமுக்கு தாண்டவம் படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே சுமார் ரகம் தான்.
2015ல் விக்ரமுக்கு பத்து எண்றதுக்குள்ள படமும், சூர்யாவுக்கு பசங்க 2 படமும் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். 2016ல் விக்ரமுக்கு இருமுகன் படமும், சூர்யாவுக்கு 24 படமும் ரிலீஸ். இதுல விக்ரம் தான் வின்னர். 2018ல் சூர்யாவுக்கு தானா சேர்ந்த கூட்டம், விக்ரமுக்கு ஸ்கெட்ச் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர்.
இதையும் படிங்க... 15 முறை சிவகார்த்திகேயனுடன் மோதிய விஜய்சேதுபதி படங்கள்!… வின்னர் யாருன்னு பார்க்கலாமா?…
2019ல் விக்ரமுக்கு கடாரம் கொண்டான் படமும், சூர்யாவுக்கு என்ஜிகே படமும் ரிலீஸ். இதுல விக்ரம் தான் வின்னர். 2022ல் சூர்யாவுக்கு எதற்கும் துணிந்தவன் படமும், விக்ரமுக்கு மகான் படமும் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர். அதே ஆண்டில் விக்ரமுக்கு கோப்ரா படமும், சூர்யா கேமியோ ரோலில் நடித்த விக்ரமும் ரிலீஸ். இதுல சூர்யா தான் வின்னர்.