சூர்யா இல்லன்னா பத்து தல படம் கிடையாது.. – அப்படி சூர்யா என்ன செய்தார் தெரியுமா?

by Rajkumar |   ( Updated:2023-03-25 13:40:29  )
gnanavel surya
X

gnanavel surya

தமிழ் தயாரிப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஞானவேல் ராஜா. தமிழில் பல ஹிட் படங்களை தயாரித்துள்ளார். தற்சமயம் சிம்பு நடித்து வெளிவர இருக்கும் பத்து தல திரைப்படத்தையும் கூட இவர்தான் தயாரித்துள்ளார்.

சூர்யாவின் குடும்பத்திற்கும் ஞானவேலுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் உண்டு. பல சமயங்களில் சூர்யா குடும்பத்திற்கு ஞானவேல் உதவி செய்துள்ளார். அதே போல ஞானவேலுக்கும் சூர்யா குடும்பத்தினர் பல முறை உதவி செய்துள்ளனர்.

Gnanavel Raja

Gnanavel Raja

ஆனால் இடையில் ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக இந்த இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இந்த சமயத்தில் ஞானவேல் தயாரித்த படங்கள் சில தோல்வியை கண்டன. இதனால் பெரும் பண இழப்புக்கு ஆளானார் ஞானவேல். இதனை சரி கட்டுவதற்காக இவர் சில ஆபாச படங்களையும் கூட தயாரித்ததாக கூறப்படுகிறது.

உதவி செய்த சூர்யா:

இதனால் சூர்யா மேலும் கோபமடைந்துள்ளார். எனவே சுத்தமாக ஞானவேல் ராஜாவை தவிர்த்துள்ளார். அதற்கு பிறகு ஞானவேல் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு சென்றதால் சூர்யா குடும்பம் பேசி முடிவெடுத்து ஞானவேல் ராஜாவுக்கு உதவியுள்ளனர்.

surya 01

அதன் பிறகு சூர்யா 42 திரைப்படத்தை ஞானவேல் ராஜாவிற்காக நடித்துள்ளார். அதன் பிறகுதான் ஞானவேல் ராஜா மீண்டும் பெரிய படங்களை தயாரிக்க துவங்கியுள்ளார். பத்து தல திரைப்படத்தை தயாரிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தனன் இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Next Story