Categories: Cinema News latest news

ஒரே கதையில் இரண்டு படங்கள்!. தெருவில் அலையும் இயக்குனர்… அட நம்ம சூர்யாவா இப்படி?..

Actior Surya:  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. நடிகர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவராகவே காணப்படுகிறார். அஜித் , விஜய் போன்றவர்கள் எல்லாம் ரசிகர்களை பார்க்கவே தயங்கும் நிலையில் தன்னுடைய ரசிகர் ஒருவர் இறந்து விட்ட செய்தி கேட்டவுடன் முதல் ஆளாக சென்று அந்த ரசிகரின் குடும்பத்தாருக்கு அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நேற்று கூட ஒரு ரசிகர் விபத்தில் இறந்ததை கேட்டு அந்த ரசிகர் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார். பல நல்ல நல்ல செயல்களை செய்து வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: நடிகர் திலகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை!. தோல்வியை கூட அசால்ட்டா தூக்கி போட்ட சச்சு..

அதுமட்டுமில்லாமல் வரிசையாக வெற்றிமாறனின் வாடி வாசல், சுதா கொங்கராவுடன் ஒரு புதிய படம் என லைன் அப்பில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக ஹிந்தியில் ஒரு படம் பண்ணப் போவதாக செய்திகள் வெளியாகின.

ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் ஒரு வரலாற்றுக் கதையில் சூர்யா ஹிந்தியில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தமிழில் 2019ஆம் ஆண்டு விக்ரமை வைத்து ஆரம்பிக்கப் படம் மகாவீர் கர்ணா.இந்த படத்தை இயக்குபவர் விமல்.

இதையும் படிங்க: கடவுள் பாதி மிருகம் பாதி என தொக்கா மாட்டிய வினோத்!.. ஷூட்டிங்குக்கு தேதி குறித்த உலக நாயகன்..

ஆனால் இதே மகாவீர் கர்ணா திரைப்படம் தான் ஹிந்தியில் சூர்யா நடிப்பில் தயாராக இருக்கிறது என்ற ஒரு பேச்சு அடிபட்டது. இதை அறிந்த இயக்குனர் விமல் சூர்யாவின் அலுவலகத்தில் போய் விசாரித்திருக்கிறார். ஆனால் அங்கு இருந்தவர்கள் சூர்யா அப்படிப்பட்ட கதையில் நடிப்பதாகவே இல்லையே. உங்களுக்கு யாரோ பொய்யான செய்தியை சொல்லியிருக்கின்றனர் என்று கூறி அனுப்பியிருக்கின்றனர்.

ஆனால் உண்மையிலேயே சூர்யா ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் நடிக்கப் போவது இந்த மகாவீர் கர்ணா திரைப்படத்தின் கதையில்தானாம். ஆனால் ஒரு பக்கம் விக்ரம் நடித்து பாதியிலேயே கிடப்பில் இருகும் மகாவீர் கர்ணாவின் கதை என தெரிந்தால் சூர்யா கண்டிப்பாக இதற்கு சம்மதிக்க மாட்டார் என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: கேண்டீனை விட்டு வெளியேறிய பாக்கியா… குஷியில் ராதிகா- கோபி… கடுப்பில் ஈஸ்வரி..!

எப்படி இருந்தாலும் நம் கதையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிரி புதிரியாக படம் தயாராக வில்லை என்றாலும் இப்படி ஒரு படம் இருக்கிறது என்பதை தெரியப்படுத்துவதற்காகவே மகாவீர் கர்ணா பட போஸ்டரை இயக்குனர் விமல் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

Published by
Rohini