உங்களுக்கு நான் அம்மா ரோல்லாம் பண்ண முடியாது... வீட்டில் உருண்டு பிரண்ட எஸ்.ஜே.சூர்யா... அப்படிப்பட்ட நடிகை யார் தெரியுமா?
எஸ்.ஜே.சூர்யா தனது படம் ஒன்றில் இளம் நடிகையை அம்மாவாக நடிக்க வேண்டும் என அடம் பிடித்த சம்பவம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யாவின் தொடக்கம்:
தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. வசந்த் இயக்கத்தில் ஆசை படம் உருவான பொழுது அவரின் உதவி இயக்குனராக இருந்தார். தொடர்ந்து சபாபதி இயக்கத்தில் சுந்தர புருஷன் படத்திலும் பணியாற்றி இருந்தார்.
இவர் உல்லாசம் படத்தில் வேலை செய்து வந்த போது, எஸ்.ஜே.சூர்யா வை கண்டுக்கொண்ட அஜித் அவரிடம் நன்றாக பேசி இருக்கிறார். அப்போது தன்னிடம் இருந்த ஒரு கதையை எஸ்.ஜே.சூர்யா சொல்ல அஜித்திற்கு அது ரொம்பவே பிடித்துவிட்டதாம்.
வாலிக்கு ஓகே சொன்ன அஜித்:
உடனே எஸ்.எஸ்.சக்கரவர்த்தியை போய் பார்க்கும்படி கூறினாராம். அவரும் இவர் சொன்ன கதையில் அசந்து விட உடனே தொடங்கப்பட்ட படம் தான் வாலி. முதலில் சிம்ரன் கதாபாத்திரத்திற்கு தேர்வானவர் தெலுங்கு நடிகை கீர்த்தி ரெட்டி. பின்னர் சில காரணங்களால் அவர் விலகி விட சிம்ரன் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார்.
படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கோலிவுட்டிலும் இயக்குனராக முதல் அடி சிறப்பாக இருந்தது எஸ்.ஜே.சூர்யாவிற்கு. வாலி படத்தின் ப்ரீமியர் ஷூவை பார்த்த ஏ.எம்.ரத்னம் கொடுத்த வாய்ப்பில் அமைந்த படம் தான் குஷி. இரண்டே படங்களில் கோலிவுட்டின் டாப் நாயகர்களை இயக்கினாலும் பெரிய இயக்குனர் என்ற அந்தஸ்த்தை எஸ்.ஜே.சூர்யாவால் அடையவே முடியவில்லை.
தேவயானியிடம் உருண்டு பிரண்ட எஸ்.ஜே.சூர்யா:
2001 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது படத்தின் வேலைகளில் பிஸியாகினார் எஸ்.ஜே.சூர்யா. தெலுங்கில் நானி என்ற பெயரில் உருவாக இருந்த அப்படத்தில் மகேஷ் பாபு முக்கிய வேடமேற்று இருந்தார். அமீஷா பட்டேல், ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தனர். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு அம்மாவாக தான் தேவயானியை நடிக்க வேண்டும் என எஸ்.ஜே.சூர்யா கேட்டு இருக்கிறார்.
அந்த சமயத்தில் திருமணம் முடித்திருந்த தேவயானி முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். இருந்து இவர் விடாப்படியாக இருப்பதை பார்த்து கதை சொல்லுங்கள் எனக் கேட்க அப்பொழுது தேவயானி வீட்டில் விழுந்து பிரண்டு மொத்த கதையையும் சொல்லி முடிக்க தேவயானிக்கு பிடித்து விட்டதாம்.
இதையும் படிங்க: கண்டக்டரா இருக்கும்போதே அவரு சூப்பர்ஸ்டார் தான்…!!! புட்டு புட்டு வைக்கும் எஸ்.ஜே.சூர்யா
உங்களுக்கும் நாயகிக்கும் ஒரே வயது தான் எனக் கூறியவுடன் படத்தில் நடித்து கொடுத்தாராம். தொடர்ந்து அந்த படத்தின் தமிழ் பதிப்பான நியூ உருவாக இருந்தது. அதில் முதலில் அஜித் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. ஆனால் அஜித் கால்ஷூட் பிரச்னையால் அந்த படத்தில் இருந்து விலகினார். பின்னர் எஸ்.ஜே.சூர்யா அந்த படத்தில் நடித்து இயக்கி இருந்தார். அம்மா வேடத்தில் தேவயானியே நடித்தது குறிப்பிடத்தக்கது.