Connect with us

30 லட்சம் தருகிறோம்!. முடிச்சி விடுங்க!.. எஸ்.வி.சேகரிடம் பேரம் பேசிய கார்த்தி படக்குழு..

latest news

30 லட்சம் தருகிறோம்!. முடிச்சி விடுங்க!.. எஸ்.வி.சேகரிடம் பேரம் பேசிய கார்த்தி படக்குழு..

Actor Karthi: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்  கார்த்தி. சினிமாவில் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும் சிவக்குமார் தன் வாரிசுகளான சூர்யாவையும் கார்த்தியையும் ஒரு நல்ல கலாச்சார பண்பாட்டிலேயே வளர்த்திருக்கிறார்.

சிவக்குமார் குடும்பத்தின் மீது திரைத்துறைக்கு மட்டுமில்லாமல் பொது மக்களிடமும் ஒரு நல்ல மரியாதை இருக்கிறது. ஒரு பக்கம் சூர்யா விதவிதமான கெட்டப்பில் கலக்கி வருகிறார். இன்னொரு பக்கம் கார்த்தி வித்தியாசமான கதைகளத்தோடு பயணம் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: கோட் படத்துல விஜய்க்கு இப்படி ஆகிடும்!.. வெளியான போட்டோ!.. ஷாக்கான தளபதி ஃபேன்ஸ்!…

இந்த நிலையில் கார்த்தி நடித்த ஒரு படத்தின் சென்சார் பற்றி பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறினார். சென்சார் கமிட்டியில் எஸ்.வி.சேகர் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தாராம். அந்த நேரத்தில் வெளியான கார்த்தியின் படம் ‘கொம்பன்’.

முத்தையா இயக்கத்தில் வெளியான கொம்பன் திரைப்படம் குறிப்பிட்ட சாதியை மட்டும் உயர்த்தி காட்டுவதாக அந்தப் படத்தில் இருந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தில் ஒரு சீனில் முக்குலத்தோர் காவல் நிலையம் என்ற பெயரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனை காட்டியிருப்பார்களாம்.

இதையும் படிங்க: விடிய விடிய பாத்தாலும் வெறி குறையாது!.. தூக்கலா காட்டி அசர வைக்கும் யாஷிகா….

அதை பார்த்த எஸ்.வி முக்குலத்தோர் சங்கம் தொடர்பாக ஏற்கனவே ஒரு கலவரம் நடந்ததை நினைவு படுத்தி அந்த பெயரை எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படத்தில் மொத்தம் 96 மியூட் மற்றும் 36 கட்-கள் பண்ண வேண்டியிருந்ததாம்.

எனவே எஸ்வி சேகரிடம் ‘30 லட்சம் தருகிறோம். உடனே ரிலீஸ் செய்து விடுங்கள்’ என்றெல்லாம் சொல்லி கேட்டார்களாம். ஆனால், சேகரோ ‘இந்த பணம் வாங்குவது கொடுப்பது எல்லாம் இங்கு அனுமதி இல்லை. நான் வாங்கவும் மாட்டேன்’ என்று சொல்லி மறுத்துவிட்டாராம். இதை ஒரு பேட்டியில் எஸ்வி சேகரே கூறினார்.

இதையும் படிங்க: ஒருத்தர் கூட வாங்கலயே!.. லால் சலாம் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா?!.. ஐயோ பாவம்…

 

Continue Reading
You may also like...
To Top