டி.ராஜேந்தரின் பாடல்கள் கேட்க ரசனை தான்... ஆனா செஞ்ச சம்பவங்கள் தான் சோகம்..!
டி.ராஜேந்தரின் ஆரம்பகால படங்கள் எல்லாமே சோகமயமாகவே இருந்தன. டி.ராஜேந்தர் ஏன் தாடி வச்சிருக்காருன்னா அவர் நிஜத்தில் காதலித்து தோல்வி அடைந்தவராம். பெரும்பாலும் அவரது படங்கள் காதல் தோல்வியாகத் தான் இருக்கும்.
அவரது இசையில் குறிப்பாக டி.எம்.எஸ். நிறைய பாடல்களைப் பாடியிருப்பார். 'அமைதிக்குப் பெயர் தான் சாந்தி', 'நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா', 'நான் ஒரு ராசியில்லா ராஜா'. 'என் கதை முடியும் நேரமிது' ஆகிய பாடல்களைச் சொல்லலாம்.
இதையும் படிங்க... பின்வாங்கும் புஷ்பா 2!. ஆகஸ்டு 15-க்கு களமிறங்கும் இரண்டு முக்கிய படங்கள்!…
'வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது', 'வைகைக் கரைக் காற்றே நில்லு', 'கடவுள் வாழும் கோவிலிலே' என பல சோகப்பாடல்கள் டி.ராஜேந்தருக்கு சூப்பர்ஹிட் அடித்துள்ளன. 'ஒரு தலை ராகம்' படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னாடி கதாநாயகன் சாகப்போறான். அதுவரைக்கும் தன் காதலைச் சொல்லல. அதுக்கு முன்னாடி ஒரு காட்சி கல்லூரில நடக்கும்.
அப்போஅது சந்திரசேகர் கருப்பு குருவி ரோஜாவைக் காதலித்த கதையை ஒரு சென்டிமென்ட் டயலாக்காக சொல்வார். ரசிகர்களை ரொம்பவே ஈர்த்தது. அந்தக் காலகட்டத்தில் காதலில் தோல்வி அடைந்தவர்கள் பலர் தற்கொலை பண்ணியிருக்கிறார்கள்.
காதலின் பிரிவைத் தாங்க முடியாமல் தான் இப்படி தற்கொலை செய்கிறார்கள். இதற்கு ராஜேந்தர் படங்கள் மட்டுமல்ல. அந்தக் காலத்தில் வந்த பல தோல்விப்படங்களும் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்தது என்று சொல்லலாம். இதற்கு முன்னால் காதல் தோல்வி படங்கள் வரவில்லையா என்றால் 'தேவதாஸ்' மாதிரி ஒரு சில படங்கள் வந்தன.
இதையும் படிங்க... நயன்தாராவை ஓவர் டேக் செய்த ராஷ்மிகா மந்தனா!.. சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?….
ஆனால் தொடர்ச்சியாக வந்தது என்றால் டி.ராஜேந்தர் படங்கள் தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் காதல் தோல்வி அடைந்தால் ஆசிட் வீசுகிறான் காதலன். அல்லது புதிதாக வேறு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறான். அதனால் காதல் தோல்வி அடைந்தவர்கள் தற்கொலை செய்வது ரொம்ப குறைவு. இதற்குக் காரணம் காலமாற்றம் என்றும் சொல்லலாம்.
மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.