Connect with us

Cinema News

பேன் இந்திய திரைப்படம்.. எஸ் டி ஆர் கொடுத்த கால்ஷீட்… டி ராஜேந்தரின் புதிய அவதாரம்..

கடந்த சில ஆண்டுகளாக பேன் இந்திய திரைப்படங்களின் வரவு அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்திய சினிமாவில் இதற்கு முன் பேன் இந்திய திரைப்படங்கள் பல வெளிவந்திருந்தாலும், இப்போது எங்கு திரும்பினாலும் பேன் இந்திய திரைப்படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.

சிலர் “பேன் இந்தியா இல்லையென்றாலும் பரவாயில்லை, பேன் தென்னிந்தியா போதும்” என்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டுமே கூட வெளியிடுகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த “சீதா ராமம்” திரைப்படம் இதற்கு நல்ல உதாரணம்.

சில நாட்களுக்கு முன்பு கூட “பிரம்மாஸ்த்ரா” என்ற பேன் இந்திய திரைப்படம் வெளிவந்தது. அதே போல் வருகிற 30 ஆம் தேதி “பொன்னியின் செல்வன்” திரைப்படம் பேன் இந்திய திரைப்படமாக வெளிவரவுள்ளது.

இப்படி போய்க்கொண்டிருக்கும் டிரெண்டிற்குள் தற்போது டி ராஜேந்தரும் நுழையவுள்ளாராம். ஆம்! சில மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமேரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டி ராஜேந்திரன் தற்போது உடல் நலம் தேறியுள்ளார்.

இந்த நிலையில் தான் ஒரு பேன் இந்திய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம் டி ஆர். சில மாதங்களுக்கு முன்பே தனது பேன் இந்திய திரைப்படத்திற்கான திட்டத்தை தீட்டியிருந்தாராம். அந்த தருணத்தில் தான் உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.

தற்போது உடல்நிலை தேறியுள்ளதால் மீண்டும் அத்திரைப்படத்திற்கான பணிகளை தொடங்க உள்ளாராம். தனக்கு சொந்தமான ஸ்டூடியோவில் ஒரு பெரிய செட் ஒன்றை உருவாக்கவுள்ளாராம்.

அதே போல் தனது மகன் சிலம்பரசனிடமும் சில காட்சிகளில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளாராம். அவரும் ஓகே என்று தலையாட்டி இருக்கிறார்.

1980களில் “ஒரு தலை ராகம்”, “உயிருள்ளவரை உஷா”, “தங்கைக்கோர் கீதம்”, “மைதிலி என்னை காதலி” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை நடித்து இயக்கியவர் டி ராஜேந்தர். இவர் இறுதியாக இயக்கிய திரைப்படம் “வீராசாமி”. அதன் பின் அவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ரைமிங் வசனங்களுக்கு பெயர் போனவர் டி ஆர். இந்த நிலையில் தான் பேன் இந்திய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். இத்திரைப்படமும் டி ஆர் பாணியில் அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top