கமலிடம் தொடர்ந்து நடிக்கச் சொல்லி கண்ணீர் சிந்தி சாதித்த டி.ராஜேந்தர்...! இப்படி எல்லாமா நடந்துச்சு...!

Kamal, STR
உலகநாயகன் கமல் சிம்புவின் 48வது படத்தை தயாரிக்கிறார். இதுபற்றி உங்களது கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு டி.ராஜேந்தர் பேட்டி ஒன்றில் தனது கருத்துகளை இவ்வாறு சொல்கிறார்.
நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன். அதன்பிறகு சிவாஜியின் ரசிகன். இவர்களுக்குப் பிறகு நான் சினிமாவின் இரு கண்களைப் போல மதிப்பவர்கள் உலகநாயகன் கமல்ஹாசனும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தான்.
ஒரு முறை அரசியலுக்கு அடி எடுத்து வைத்த கமல் இனிமேல் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன போது நான் என்னுடைய நண்பர் என்ற முறையில் நான் கமல் சார்ட்ட சொன்னேன்...நான் உங்களோட ரசிகன். உங்களோட தீவிர ரசிகன். நீங்க சினிமாவே வேண்டாம்னு இனிமேல் சொல்லக்கூடாது.

Rajni, Kamal
நீங்க அப்படி சொல்லாதீங்க. என் மனசுக்கு ரொம்ப காயப்படுத்துது. அப்படி சொல்லும்போது என் கண்ணுல தண்ணி அப்படி கலகலன்னு கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. சொன்னேன். கமல் அப்படியே என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டு நான் அப்படி சொல்லிருக்கக்கூடாது ராஜூ...அப்படின்னு சொன்னாரு. சொன்னது மட்டுமல்ல.

Kamal, Logesh
இன்னைக்கு விக்ரம் படத்துல நடிச்சி தன்னுடைய மகன் பெற்றெடுத்த ஒரு பேரக்குழந்தைக்குக் கூட நான் நடிப்பேன்னு சொல்லிட்டு லோகேஷ் கனகராஜோட அடுத்த தலைமுறையோட நான் கைகோர்த்து இந்தப் படம் இத்தனை கோடி கலெக்ட் பண்ணும்னு அடுத்த தலைமுறை வந்துருக்கக்கூடிய நம் தமிழக முதல்வரோட புதல்வர் உதயநிதி ஸ்டாலினோட ரெட்ஜெயண்ட் மூலமா இந்தப் படத்தை வெளியிட்டு இன்றைக்கு இந்தியத்திரை உலகமே திரும்பிப் பார்க்குற அளவுக்கு செய்த மாபெரும் கலைஞன். அவ்வளவு புதிய முயற்சியை செய்து அந்தப் பதிவை பண்ணனது எனக்கெல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு.

T.R., Kamal, STR
நான் திரும்பவும் படம் எடுக்கணும்னு ஒரு நம்பிக்கை வருதுன்னா அது கமலா இருந்தாலும் சரி, ஜெயிலரில் நடிக்கும் ரஜினியானாலும் சரி. ரெண்டு பேரையும் பார்த்து அவர்களை நான் முன்னோடியாகக் கருதுகிறேன். அந்த ஸ்டார்டெத்தை மெயிண்டைன் பண்றதுங்கறது சாதாரண ஒரு விஷயமல்ல.
அப்படிப்பட்ட உலகநாயகன் கமல் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் என் மகன் சிலம்பரசனை அந்தப் படத்தை மிகப் பிரம்மாண்டமாக... சிம்புவோட திரை உலக வாழ்க்கையிலேயே இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்டமாக இந்தப் படத்தை உருவாக்குவேன் என்று சொன்னால் அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை.
இன்னைக்கு ராஜ்கமல் உருவாக்கக்கூடிய தேசிங்கு பெரியசாமியின்...எங்க அப்பாவோட பெயர் தேசிங்குடையார்...அது தான் விதி.. ஒருகாலத்தில் நான் மதியை நம்பியவன். இன்று விதியை மதிக்கிறேன். நான் இன்று உங்களை சந்திச்சிருக்கேன்னா அது கடவுளோட விதி.