வடிவேலுவுக்கும் டி.ராஜேந்திரனுக்கும் இப்படி ஒரு பந்தமா? இதையும் மறந்துட்டாரே வைகைப்புயல்

by Rohini |
tr
X

tr

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் மன்னனாக தற்போது விளங்கி வருபவர் நடிகர் வடிவேலு. வைகை புயல் என்ற அடைமொழியோடு பல ஆண்டுகளாக இந்த தமிழ் திரை உலகில் தன்னுடைய நகைச்சுவையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார்.

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என அனைத்து நடிகர்களுடனும் டிராவல் செய்து அவர்களுக்கு இணையான ஒரு புகழை அடைந்திருக்கிறார் வடிவேலு. சமீப காலமாக இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்து வருகிறார். இந்த நிலையில் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது ராஜ்கிரண் என்பதுதான் அனைவருக்கும் தெரியும்.

இதையும் படிங்க: ட்ராமா போடும் ஈஸ்வரி.. கடுப்பில் ராதிகா மற்றும் கமலா… குழம்பி போய் நிற்கும் கோபி! தேவைதான்…

ஆனால் அவரை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை டி ராஜேந்திரனை தான் சேரும். இதைப்பற்றி பிரபல சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறும்போது டி ராஜேந்திரன் இயக்கிய என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் ஒரு சிறுவன் பெல் திருடுவது போலவும் அதை பார்த்த ஒருவர் அந்த சிறுவனை அடிப்பது போலவும் ஒரு காட்சி இடம் பெறும்.

அப்போது அந்த காட்சியில் நடிக்க இருந்த அந்த பெரியவர் வராததால் கூட்டத்தில் இருந்த வடிவேலுவை பார்த்து உனக்கு நடிக்க தெரியுமா என கேட்டாராம் டி ராஜேந்திரன். இவரும் தெரியும் என சொல்ல வசனங்களில் எல்லாம் சரியாக பேசுவியா என்று கேட்க அதற்கு வடிவேலு ஓகே என சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: ஜெய்சங்கர் செய்ததை பாடமாக எடுத்து கொண்டேன்!.. கமல்ஹாசன் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..

அதன் பிறகு அந்த காட்சியில் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார் டி ராஜேந்திரன். அதனால் வடிவேலு நடித்த முதல் திரைப்படம் ஆக என் தங்கை கல்யாணி என்ற திரைப்படம் தான் என சித்ரா லட்சுமணன் கூறினார். ஆனால் இதுவரை என் ராசாவின் மனசிலே திரைப்படம் தான் அவர் நடித்த முதல் திரைப்படம் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது இல்லை என சித்ரா லட்சுமணன் கூறினார்.

Next Story