பிளாஷ்பேக்: டி.ஆரின் அந்தப் படத்தில் ரஜினிகாந்த்… அட இப்படியா மிஸ் பண்ணுவாரு?

by sankaran v |   ( Updated:2025-04-03 21:01:19  )
rajni t rajendar
X

rajni t rajendar

தமிழ்சினிமா உலகில் ஒரு ஆல்ரவுண்டர் என்றால் அது டி.ராஜேந்தர் தான். நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம், இசை, பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவர். இவரது படங்களில் பெரும்பாலும் அடுக்கு மொழி டயலாக்குகள் வரும். அதற்கு இவரை விட்டால் தமிழ்சினிமா உலகில் பேச ஆளே கிடையாது. இவருக்குப் பிறகு யார் அது மாதிரி பேசினாலும் அது எடுபடாது.

இன்னொன்று படத்தில் நடிக்கும்போது கதாநாயகியைத் தொடாமல் நடித்த நடிகரும் இவர்தான். படங்களில் செட்டுகளை பிரம்மாண்டமாக முதலில் அமைத்து ரசிகர்கள் மத்தியில் அதைப் பற்றிப் பேச வைத்தவரும் டி.ராஜேந்தர்தான். இவரது படங்களில் பாடல் காட்சிகளில் இதுபோன்ற பிரமிக்க வைக்கும் செட்டுகளைப் பார்த்து ரசிக்கலாம்.

அந்த வகையில் இவரது படங்கள் எல்லாமே அப்போது வெள்ளிவிழா தான் என்ற நிலையில் இருந்தது. ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோதே அவர்களுக்கு இவர் டஃப் கொடுக்கும் வகையில் படங்களை எடுப்பார். அந்த வகையில் 1983ல் இவரது தயாரிப்பு, நடிப்பு, இயக்கம், இசையில் வெளிவந்த படம் உயிருள்ள வரை உஷா.

uyirullavarai ushaஇந்தப் படத்தில் அவருடன் இணைந்து நளினி, எஸ்எஸ்.சந்திரன், கங்கா, கவுண்டமணி, ராதாரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, காந்திமதி, சரிதா உள்பட பலர் நடித்துள்ளனர். பாடல்கள் எல்லாமே சூப்பர் ரகங்கள். அடி என்னடி, உன்னத்தானே, மோகம் வந்து, இந்திரலோகத்து சுந்தரி, கட் அடிப்போம், வைகைக்கரைக் காற்றே நில்லு, இதயமதை கோவில் என்றேன் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. இந்தப் படத்தைப் பற்றி யாரும் கேள்விப்படாத தகவல் ஒன்றை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது லென்ஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

டி.ராஜேந்தர் தனது உயிருள்ள வரை உஷா படத்துக்கு முதலில் ஜெயின் ஜெயபால் என்றுதான் பெயர் வைத்து இருந்தார். அந்தப் படத்தில் பிரதான கேரக்டர் ஜெயின் ஜெயபால். அந்தப் படத்தின் பெயர் ஜெயின் ஜெயபாலாக இருந்த போது அந்தக் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க டி.ராஜேந்தர் கேட்டது உண்மைதான் என்கிறார் சித்ரா லட்சுமணன்.

Next Story