rajkiran
-
ராஜ்கிரண் அந்த விஷயத்துல என்ன அழவச்சார்!.. சீக்ரெட்டை பகிர்ந்த ‘பூவே உனக்காக’ பட நடிகை…
Actress sangeetha: தமிழ் திரையுலகில் பல வருடங்களுக்கு முன்பே வினியோகஸ்தராக நுழைந்தவர் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து ஹீரோவாக பல ஹிட் படங்களிலும் நடித்தார். இப்போது குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார். அதேபோல், 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சங்கீதா. இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சில மலையாள…
-
அவரையே நீ அசிங்கமா பேசுறீயா?… மாரிமுத்தை வெளிய போ எனக் கத்திய ராஜ்கிரண்…
Marimuthu: சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு வாழ்க்கை கொடுத்த ராஜ்கிரண் ஒருமுறை கோபத்தில் அவரை தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி விட்டார். அதுகுறித்த பின்னணி தகவலும், சினிமாவிற்குள் கூட எப்படி ஒரு பாலிடிக்ஸ் விளையாடியது என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தவர் மாரிமுத்து. அவருக்கு முதல் பெரிய வரவேற்பு இல்லை. மிகப்பெரிய போராட்டத்தினையே சந்தித்து இருக்கிறார். ஆனால் வீட்டிற்கு போக விருப்பம் இல்லாமல் சென்னையிலே தங்க முடிவெடுத்து இருக்கிறார். இதையும்…
-
ரஜினியை விட அதிக சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன்- ராஜ்கிரண் அட்டூளியம்; கதறிய தயாரிப்பாளர்!!
நடிகர் ராஜ்கிரண் ஒரு காலத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய நடிகர் ராஜ்கிரண் தான். தற்போது முனி, கிரீடம், சண்டைக்கோழி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் என்று தொடர்ச்சியாக 3 மெகா ஹிட் படங்களை கொடுத்த ராஜ்கிரண், அந்த மூன்று படங்களையும் அவரே…
-
அந்த படத்துக்கு ரோட்டுல நின்னு ட்ரெஸ் மாத்துனாங்க !.. படப்பிடிப்பில் மீனாவிற்கு நடந்த சம்பவம்…
சிறு வயது முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் துவங்கி அதிக ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் நடிகை மீனா. அதேபோல மிகச் சிறிய வயதிலேயே கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு வர அறிமுகமானார். 1991 ஆம் ஆண்டு மீனா கதாநாயகியாக நடித்த முதல் முதலாக வெளிவந்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இந்த படத்தில் நடிக்கும்போது மீனாவிற்கு 15 அல்லது 16 வயதுதான் இருக்கும். இயக்குனர் கஸ்தூரி ராஜா இந்த படத்தை…
-
நான் சினிமாவுக்கு வர்றதுக்கு காரணமே டி.ஆர்தான்!.. வடிவேலு சொன்ன புது கதை…
அறிமுகமான நாள் முதல் இப்போது வரை மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என அனைவராலும் அழைக்கப்படும் வடிவேலு தனது ஆரம்ப வாழ்க்கை முதலே நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். திரைப்படங்களில் வரும் நகைச்சுவையை பேசுவது மட்டுமல்லாமல் உடல் மொழி மூலமாகவும் மக்களை சிரிக்க வைக்க தெரிந்தவராக வடிவேலு இருந்தார். அதனால்தான் கவுண்டமணி செந்தில் போன்ற பெரிய காமெடி நடிகர்களுடன் நடித்த போது…
-
கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ரஜினி படத்துல நடிக்க மாட்டேன்- கொள்கையில் புலியாய் நின்ற ராஜ்கிரண்…
தமிழ் சினிமாவில் கிராமத்து கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்காக உருவெடுத்த நடிகராக திகழ்ந்தவர்தான் ராஜ்கிரண். மிகவும் கம்பீரமான கதாப்பாத்திரங்களில் கர்ஜிக்கும் நடிப்பை பல திரைப்படங்களில் வெளிப்படுத்திய ராஜ்கிரண், ஒரு நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வந்தார். “என் ராசாவின் மனசிலே”, “அரண்மனை கிளி” உட்பட பல வெற்றித்திரைப்படங்களில் நடித்த ராஜ்கிரண், “நந்தா”, “கோவில்”, “சண்டக்கோழி”, “முனி” போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் மிக சிறப்பாக நடித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு முறை ரஜினி படத்தில் நடிப்பதற்கான…
-
அந்த சீன் சரியா வரலை… கடுப்பில் பேனாவை கடித்து துப்பிய ராஜ்கிரண்!.. அப்படி என்ன சம்பவம்?
சினிமாவில் அறிமுகமான உடனேயே பெரும் பிரபலமான நடிகர்களில் ராஜ்கிரணும் ஒருவர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரணுக்கு வெகு நாட்களாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமலே இருந்தார். முதல் படம் நடித்தால் அதற்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் ராஜ்கிரண். ஆனால் அப்போதெல்லாம் இளையராஜாவிடம் அவ்வளவு எளிதில் வாய்ப்பை வாங்கிவிட முடியாது. அதற்கு பிரசாத் ஸ்டுடியோ வாசலில் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் காத்திருக்க வேண்டும். ஆனால் இளையராஜாவும் ராஜ்கிரணும்…
-
படத்தை ஓட வைக்க இதுதான் வழி.. ராஜ்கிரண் செய்த ட்ரிக்- இது புதுசா இருக்கே!
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலுமே பெரும் வெற்றியைக் கண்டவர் நடிகர் ராஜ்கிரண். ராஜ்கிரண் நடித்த இயக்கிய தயாரித்த பல படங்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளனர. அவர் நடித்த அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே போன்ற திரைப்படங்கள் இப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் திரைப்படங்களாக உள்ளது. ராஜ்கிரண் சினிமாவிற்கு வந்த புதிதில் படங்களில் நடித்துக் கொண்டு மட்டும் இருந்தார் ஆனால் போகப் போக அவருக்கு படத்தை இயக்குவதிலும் அதிக ஆர்வம் இருந்ததால்…
-
இன்னும் 15 நாளில் உனக்கு இது நடக்கும்!.. குறி சொன்னவரையே குருவாக ஏற்றுக்கொண்ட ராஜ்கிரண்!…
தமிழ் சினிமாவில் வினியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக மாறியவர் ராஜ்கிரண். மிகவும் வறுமையான குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். பிக்சர் பொட்டியை சைக்கிளில் வைத்து கட்டிக்கொண்டு தியேட்டருக்கு கொண்டு சென்று கொடுக்கும் வேலையெல்லாம் இவர் செய்துள்ளார். இவரின் நிஜப்பெயர் மொய்தீன் அப்துல் காதர். திரையுலகில் இவரை காதர் பாய் என அழைப்பார்கள். ஒருகட்டத்தில் தயாரிப்பாளராக மாறி ராமராஜனை வைத்து ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரித்த என் ராசாவின் மனசிலே படத்தில் ராமராஜன் நடிக்க முடியாமல் போக அவருக்கு…
-
வடிவேலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுண்டமணி… விஜயகாந்த் செய்த துணிகர காரியம்… என்ன நடந்தது தெரியுமா?
வடிவேலு தமிழ் சினிமாவின் மாபெரும் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இவர் பிறந்த ஊர் மதுரை. ஒரு முறை ராஜ்கிரண், தனது ரசிகரின் திருமணத்திற்காக மதுரை சென்றிருந்தார். சென்னை திரும்புவதற்கு இரவு நேரத்தில்தான் ரயில். ஆதலால் அதுவரை என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் ராஜ்கிரண். ராஜ்கிரணை கவர்ந்த இளைஞர் அப்போது மணமகன் தனது உற்ற நண்பராக இருந்த ஒரு இளைஞரை ராஜ்கிரணுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த இளைஞர் ராஜ்கிரணிடம் மிக…










