குத்துன்னா இப்படி இருக்கணும்!… ‘மகான்’ பட பாடலுக்கு விக்ரம் போட்ட குத்தாட்டம் (வீடியோ)…

Published On: September 25, 2021
mahaan
---Advertisement---

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். விக்ரமின் 60 வது படம் என்பதால், சீயான் 60 என அழைக்கப்பட்டு வந்தது.

இப்படத்தில் விக்ரம் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீசாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் முக்கிய காட்சிகள் டார்ஜிலிங்கில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து நேபாள எல்லையில் படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.

இப்படத்திற்கு ‘மகான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த ஆகஸ்டு மாதம் படக்குழு வெளியிட்டது. இதில், பைக் ஓட்டும் விக்ரமின் தலையில் கொம்பு இருப்பது போலவும், பின்னால் பல கைகள் இருப்பது போலவும் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்ட்டிருந்தது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சூரையாட்டம் பாடலுக்கு நடிகர் விக்ரம் நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் நாராயணன் இப்பாடலை தனது குழுவினருடன் ஒலிப்பதிவு செய்த வீடியோ வெளியானது. மேலும், இப்படல் வீடியோ கடந்த 22ம் தேதி வெளியானது ஆனாலும், விக்ரம் ஆடிய இந்த காட்சியை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

கார்த்திக் சுப்பாராஜின் கடைசிப்படம் ‘ஜெகமே தந்திரம்’ ஏமாற்றமளித்தது. விக்ரம், துருவ் விக்ரமின் படங்களும் ரசிகர்களை கவரவில்லை. மூவருக்கும் ஒரு வெற்றி அவசியம் என்ற நிலையில் ‘ மகான்’ படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment