நீங்க தான் இந்த பிரச்னைக்கே காரணமா? நாட்டாமை கொளுத்தி விட்டதை அனச்சு விட்ட அமாவாசை!
அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? விஜயா? ரஜினிகாந்தா? எனப் பல தரப்பிலும் தற்போது பேச்சாகவே இருக்கிறது. இந்த பிரச்னை சமயத்திலேயே ரஜினிகாந்த் பேசியதும் வைரலாக பரவ அது ஜெய்லர் படத்தின் வசூலுக்கு வெகுவாக உதவியது. இதை தொடர்ந்து இன்னமும் இந்த நெருப்பு புகைந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த பிரச்னை தற்போது பெரிய வைரல் நிகழ்வாக இருந்தாலும் இதை கொளுத்தி விட்டவர் யாராக இருக்கும் ஏன் இந்த பிரச்னை திடீரென விஸ்வரூபம் எடுத்தது என பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கலாம். விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என முதலில் பேசியவர் சரத்குமார் தான்.
இதையும் படிங்க :வாலன்டியரா போய் வண்டியில நான் ஏன் ஏறணும்… ரஜினி பேச்சுக்கு ’நோ ரிப்ளே’.. கப்சிப் மோடில் விஜய்!
சூர்யவம்சம் படத்தின் 175 வது வெற்றி விழாவில் எதிர்கால சூப்பர்ஸ்டார் விஜய் தான் என பேசினார். சரி, அது பேசி பல வருடம் ஆச்சே என்று நினைத்தால் கூட அங்கு மட்டும் நிற்கவில்லை அவர். சமீபத்தில் வாரிசு படத்தில் விஜயின் தந்தையாக நடித்து இருந்தார். அப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், அப்போது நான் சொன்னது தான் இப்போது நடந்து இருக்கிறது. விஜய் தான் தற்போதைய சூப்பர்ஸ்டார் எனத் தெரிவித்தார். இது தான் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க காரணமாகியது.
இதனால் சினிமா பிரபலங்களின் பேட்டியில் கூட யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற கேள்வியே முதன்மையாக இருக்கிறது. இதில் பலர் ரஜினிகாந்த் தான் என நேரடியாக சொல்லிவிட்டனர். சிலருக்கு விஜய் தான் என ஆதரவினையுமே தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் இந்த சர்ச்சை ஓய்ந்ததற்கு சத்யராஜின் ஒரு பேட்டி தான் தற்போதைய காரணமாகி இருக்கிறது.
இதையும் படிங்க : சந்தேகப்பட்டு கவிஞர் வாலி வைத்த டெஸ்ட்!… அசால்ட் பண்ணி டேக் ஆப் ஆன இசைஞானி!..
அங்காரகன் படத்தின் விழாவிலும் சத்யராஜிடம் யார் அடுத்த சூப்பர்ஸ்டார் எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சற்றும் யோசிக்காத சத்யராஜ், கடந்த 45 வருடமாக சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி சார் தான். அதை மாத்தக்கூடாது. கமல் தசாவதாரம் நடித்ததால் அவரை நடிகர் திலகம் என்றால் ஒப்புக்கொள்வார்களா? மக்கள் திலகம் என்று ரஜினியை சொல்ல முடியுமா? உலகநாயகன் என்றால் கமல், தளபதி என்றால் விஜய், தல என்றால் அஜித் தான். அதுப்போல தான் சூப்பர்ஸ்டார் என்றால் அது எப்போதுமே ரஜினிகாந்த் தான் என்றார்.
ரஜினியின் மீது 30 வருடமாக பகையில் இருந்தால் கூட அதை இந்த பிரச்னையில் காட்டாமல் நியாகமாக பதில் சொல்லி இருக்கிறார் சத்யராஜ் என பல தரப்பிலும் அவரை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.