முதல் தடவை சரியா வரல.! இன்னொரு தடவை ஜோடி சேரனும்.! கெஞ்சும் தமன்னா.! அவர பத்தி தெரியாம பேசுறாங்களே.!

Published on: March 11, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என அனைத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தமன்னா. அப்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக தமன்னா வலம் வந்தார். அதன் பிறகு புதிய நடிகைகளின் வரவால் தமன்னாவின் மார்க்கெட் சரிய தொடங்கியது.

தமன்னா ஹீரோவுடன் டூயட்  ஆடும் ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்ததாலும், ஹீரோயினுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க தவறியதாலும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. அதன்பிறகு ஒரு சில வெப்சீரிஸ், சில பெரிய படங்களில் குத்து பாடல்கள் என அப்படி தனது ரூட்டை மாற்றி விட்டார்.

 

அவர் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, நான் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உடன் படங்களில் நடித்துவிட்டேன். அவர்களுடன் எனது கெமிஸ்ட்ரி நன்றாக பேசப்பட்டது. ஆனால், ஒரு நடிகருடன் இணைந்து கெமிஸ்ட்ரி சுத்தமாக ஒர்க்அவுட் ஆகவில்லை.

இதையும் படியுங்களேன் – அந்த படத்தில் விஜயகாந்த் நடித்தே முடித்துவிட்டார்.! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த படக்குழு.!

 

ஆம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவுடன் தமன்னா ஜோடி சேர்ந்து நடித்து இருப்பார். ஆனால் வயதான சிம்புவுடன் தமன்னா ஜோடி சேர்ந்து நடித்ததால் அந்தத் திரைப்படத்தில் அந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த படமே ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அது வேறு கதை.

ஆதலால், மீண்டும் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்று தனது ஆசையை அதில் வெளிப்படுத்தியுள்ளார். இதனை சிம்பு தரப்பு கேட்டு விரைவில் சிம்புவும் தமன்னாவும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment