வேண்டுமென்றே ஒதுக்கப்பட்ட தமன்னா… இதுக்காகவா இப்படி செஞ்சாங்க.. அட கடவுளே..

Published on: August 9, 2023
tammanna
---Advertisement---

நடிகை தமன்னா கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்த தமன்னா, மீண்டும் காவாலா பாடல் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்துவிட்டார்.

மீண்டும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு வந்துகொண்டிருக்கிறது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி என தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இதுவரை 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் தமன்னா. தமிழில்  2006ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையும் படிங்க- துட்டுக்கு ஏத்த பிட்டு!.. கவர்ச்சிக்கு ஏத்தமாதிரி ரேட்டு பேசும் தமன்னா!.. புள்ள பொழச்சிக்கும்!..

அடுத்தடுத்து வியாபாரி, படிக்காதவன், அயன், தில்லாலங்கடி, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். அடுத்து விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்தி படத்தில் தான் தமன்னா அறிமுகமானார்.

அதன் பிறகு தான் தமிழ் சினிமாவிற்கு வந்தார். அவர் தமிழ் சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை தமன்னாவின் தந்தை ஒரு மிக பெரிய வைர வியாபாரி. ஆரம்பத்தில் இருந்தே வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் தமன்னா.

சினிமாவில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு, வாய்ப்பு தேடியபோது, உடனேயே அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால், அந்த படங்கள் ஓடாததால், தமன்னா ஒரு ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி விட்டனர். இதனால், அவர் அங்கு தேடி அளைந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போது, தமிழ் சினிமாவில் கேடி படத்தில் வாய்ப்பு கிடைத்து நடிக்க வந்தார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க- தடைகளை தாண்டி வந்து தமன்னாவை தொட்ட ரசிகர்!.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.