நடிகை தமன்னா நடிப்பில் புதிதாக வெளியாக உள்ள வெப்சீரிஸ் புரமோஷனுக்கு தனது காதலர் விஜய் வர்மாவுடன் நடிகை தமன்னா கலந்துக் கொண்ட நிலையில், இருவரையும் சுற்றி பலவிதமான ட்ரோல்களும் மீம்களும் வைரலாகி வருகின்றன.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜீ கர்தா வெப்சீரிஸ், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 உள்ளிட்ட ஓடிடி படைப்புகளின் புரமோஷனுக்கு தமன்னாவுடன் ஜோடி போட்டு சுற்றித் திரிந்த விஜய் வர்மா ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் புரமோஷன் சமயத்தில் தமன்னாவுடன் இணைந்திருக்கவில்லை.
இதையும் படிங்க: கழட்டிவிட்ட கோலிவுட் ஹீரோ!.. அப்பா வயது நடிகருடன் ரகசிய வாழ்க்கை நடத்துறாரா கிரிஞ்சு நடிகை?..
இந்தியில் கூட தனியாளாகத்தான் காவாலா இந்தி வெர்ஷனை ரிலீஸ் செய்து ஆட்டம் போட்டிருந்தார் நடிகை தமன்னா. வெப்சீரிஸ் புரமோஷனுக்காகத்தான் இருவரும் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டனர் போல என்றெல்லாம் ட்ரோல்கள் குவிந்தன.
இந்நிலையில், அடுத்ததாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ள தமன்னா நடித்துள்ள ஆக்ரி சாக் வெப்சீரிஸ் நிகழ்ச்சி நேற்று இரவு மும்பையில் நடைபெற்ற நிலையில், மீண்டும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா தனது காதலி தமன்னாவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: நான் பண்ண அந்த ஒரு தப்பு!.. கல்யாணமும் ஆகல!.. வாழ்க்கையும் வீணாப்போச்சி.. கதறும் கிரண்
இருவரும் சூப்பர் ஜோடி என தமன்னா மற்றும் விஜய் வர்மா ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரலாக்கிய நிலையில், புரமோஷனுக்கு மட்டுமே விஜய் வர்மாவை தமன்னா பயன்படுத்தி வருகிறாரா? மற்ற நேரங்களில் தமன்னா தனியாகவே தென்படுகிறாரே ஏன்? என்கிற கேள்வியையும் முன் வைத்துள்ளனர்.
தனது காதல் கதையை சொல்லியே நடிகை தமன்னா அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் என பனை மரத்துக்கு ஒண்ணு, தென்னை மரத்துக்கு ஒண்ணுன்னு ஒவ்வொரு வெப்சீரிஸாக நடித்து சம்பாதித்து வருகிறார் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும், இதிலும், தமன்னா ஆடைகளை கழட்டிப் போட்டு, குதிரை சவாரி செய்வாரா என்றும் படு ஆபாசமான கமெண்டுகளும் பாலிவுட் வட்டாரத்தில் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழில் வெளியான ஜெயிலர் மற்றும் தெலுங்கில் வெளியான போலா சங்கர் உள்ளிட்ட படங்களில் தமன்னாவுக்கு எந்தவொரு பெரிய பெயரும் கிடைக்காத நிலையில், மீண்டும் பாலிவுட் வெப்சீரிஸ் பக்கம் ஒதுங்கி விட்டார் தமன்னா என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.