ஓஹோ இதுதான் நடந்ததா?: தமன்னா மீது புகார் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

Tamannaah
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழில் இவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். கடைசியாக தமிழில் இவர் விஷாலுடன் 'ஆக்சன்' படத்தில் நடித்திருந்தார். அதன்பின் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் தமிழில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதுபோல், தெலுங்கில் அந்நிகழ்ச்சியை தமன்னா தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், திடீரென அந்நிகழ்ச்சியிலிருந்து இவர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் அனுசியா என்பவர் தொகுத்து வழங்கினார்.

Tamannaah
இந்நிலையில் அந்நிகழ்ச்சியிலிருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், தனக்கு முழுமையான சம்பளம் தரவில்லை என்றும் தமன்னா வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் தற்போது தமன்னா மீது பெங்களூருவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக தமன்னவுக்கு 18 நாட்களுக்கு ரூ.2 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அவர் 16 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கான தொகை ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளத்தை தமன்னாவுக்கு கொடுத்து விட்டோம்.
ஆனால், அதன்பின் எங்கள் படப்பிடிப்பில் பங்கேற்காமல் தாமதம் செய்ததால் எங்களுக்கு ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. தமன்னா எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளார். எஞ்சிய படப்பிடிப்பையும் தமன்னா முடித்து கொடுத்தால் மீதி பணத்தையும் அவருக்கு கொடுக்க தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.