அரண்மணை படத்தில் தமன்னா சம்பளம் இத்தனை கோடியா? அடங்கப்பா! பொண்ணு வெவரம் தான்!

by Akhilan |
அரண்மணை படத்தில் தமன்னா சம்பளம் இத்தனை கோடியா?  அடங்கப்பா!   பொண்ணு வெவரம் தான்!
X

Aranmanai: சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை நான்காம் பாகம். இப்படத்தில் முக்கிய இடத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். படம் சுமார் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இப்படத்தில் தமன்னாவின் சம்பளம் பற்றிய விவரம் வைரல் ஆகி வருகிறது.

கோலிவுட்டின் பேய் பட சீரிஸ் வரிசையில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது அரண்மனை. ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்காம் பாகம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் படத்திலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: வந்தா எல்லாரும் ஒன்னாவே வந்துடுவீங்களா… கோட், கூலி, குட் பேட் அக்லி…என்ன ஒரே மாதிரியா இருக்கு…

இதனால் அவருக்கு பதில் அந்த இடத்தை சுந்தர் சி ஏற்று நடித்திருக்கிறார். முக்கிய இடத்தில் தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த வருடத்தில் ஓரளவு நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் அரண்மனை 4 தான்.

இப்படத்தின் மியூசிக் டைரக்டராக சுந்தர்சியுடன் ஆறாவது முறையாக இணைந்து இருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா. இப்படம் வெளியாகி முதல் வாரத்தில் உலகளாவில் 50 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது வார முடிவில் 75 கோடி வருமானம் செய்திருந்ததும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: ஆரம்பிச்சிட்டாங்க அலப்பறைய! ‘குக் வித் கோமாளி’யை கூண்டோடு காலிபண்ண இறங்கிய வடிவேலு

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்த நடிகை தமன்னா தன்னுடைய சம்பளமாக 5 கோடி வரை வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கு முன் ஜெயிலர் திரைப்படத்தை அவர் சம்பளமாக 3 கோடி ரூபாய் வாங்கி இருந்தார். தற்போது அரண்மனை படத்தில் தன்னுடைய சம்பளத்தை 30% உயர்த்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story