வந்தா எல்லாரும் ஒன்னாவே வந்துடுவீங்களா… கோட், கூலி, குட் பேட் அக்லி…என்ன ஒரே மாதிரியா இருக்கு…

Coolie-Goat-GBU: முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் அடுத்த படங்களில் இந்த விஷயம் ஒற்றுமையாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் என்ன இந்த முறை எல்லாரும் ஒன்னா இறங்கி இருக்காங்க என கலாய்த்து வருகின்றனர்.

விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தினை விரைவில் தொடங்க இருக்கிறார். அதற்கு முன்னர் அவர் ஒப்புக்கொண்ட தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி69 படங்களில் கடைசியாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது. இதில் தளபதி69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவே இல்லை. நிறைய அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் நிறைந்திருக்கிறது.

இதையும் படிங்க: பல்லவி ஹீரோயினு சொன்னதும் ஆடிப்போன ராமராஜன்! ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

ஆனால் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் அதன் வி எஃப் எக்ஸ் பணிகளும் முடிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படம் விஜய்யின் கேரியரில் வித்தியாசமாக அமைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் புரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியது. வேட்டையன் ஷூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் ரஜினிகாந்த் இப்படக்குழுவுடன் இணைவார் என கூறப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பாதியில் நிற்கும் நிலையில் அஜீத் தற்போது குட் பேட் அக்லி குழுடன் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: சிவாஜி மாதிரியே இவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு!.. கவுண்டமணி பெயர் வந்தது இப்படியா?!..

கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது. சமீபத்தில் வெளியான குட் பேக் அக்லி திரைப்படத்தின் போஸ்டர் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. சில வருடம் கழித்து அஜித் லோக்கலாக இறங்கி நடிக்க இருக்கும் கேரக்டராக இது இருக்கும் எனவும் தகவல்கள் கிசுகிசுக்கிறது. இப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், போஸ்டர் அதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இங்குதான் விஷயமே ட்விஸ்டாகி இருக்கிறது. கோட் திரைப்படத்தில் விஜயின் ஒரு கேரக்டர் வில்லன் ரோலாக இருக்கும் என கூறப்பட்டது. அதே நேரத்தில் கூலி திரைப்படத்திலும் ரஜினிகாந்த் இருக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என தகவல்கள் வெளியானது. தற்போது இதேபோல் அஜித்தும் வில்லனாகவே இப்படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்து இருக்கிறது. இதனால் முன்னணி நடிகர்கள் மூவரும் ஒரே நேரத்தில் வில்லனாக நடித்து வருவது கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

 

Related Articles

Next Story