Connect with us

Cinema History

அறிமுகப்படத்திலேயே அசுர நடிப்பு..கதாநாயகர்களுக்கே டப் கொடுத்த குணச்சித்திர நடிகர்

ரஜினி, கமல், கார்த்திக், மோகன், ராமராஜன் படங்களில் நடித்து அசத்திய மஙக்க முடியாத குணச்சித்திர நடிகரின் திரை பயணம் பற்றி இப்போது பார்ப்போம்.

சுமாரான உயரம், வட்டவடிவ அழகிய சிரித்த முகம், கண்களால் பேசுவதில் வல்லவர.; ரஜினி, கமல், கார்த்திக், மோகன் என அனைவருடனும் நடித்தவர். கலைஞர்களின் நண்பர், உறவினர். திரையுலகில் நடிப்பால் பீடுநடை போட்டு வலம் வந்தவர் தான் திலீப். இவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

இவர் இயக்குனர் விசுவின் படங்களில் தவறாமல் இடம்பெறுவார். வறுமையின் நிறம் சிவப்பு, கிளிஞ்சல்கள், சம்சாரம் அது மின்சாரம், சொல்லத்துடிக்குது மனசு, வள்ளி என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார் திலீப்.

இவர் திரை உலகில் பிரகாசித்துக் கொண்டிருந்தபோதே திரைத்துறையிலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டார். இல்லற வாழ்வில் வெற்றி நடைபோட்ட திலீப் காலனின் கோலத்தால் இளம் வயதிலேயே மறைந்து போனது திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்தது.

தமிழ்சினிமாவின் மறக்கமுடியாத குணச்சித்திர நடிகர்களில் இவரும் ஒருவர்.

1956ல் சென்னை மாநகரில் பிறந்தார் திலீப்குமார். இளம் வயதிலேயே கலை ஆர்வம் மிக்கவராக இருந்தார். நடனம் ஆடுவது, தான் பார்க்கும் கதாபாத்திரங்களைப் போல நடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

Actor dileep2

சென்னைக் கல்லூரியில் இளங்கலைப்பட்டப்படிப்பை நடித்தார். நண்பர்களுடன் இணைந்து ஒரு சில நாடகங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார். இவரது நடிப்புத்திறமையைக் கண்ட இயக்குனர் சிகரம் பாலசந்தர் 1980ல் தனது இயக்கத்தில் உருவான வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இவரை நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார்.

கமல், ஸ்ரீதேவி, எஸ்.வி,சேகர் என பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் திலீப் அறிமுகமானதால் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். இந்தப்படத்தில் ரங்கன் என்ற கமலின் நண்பர்களில் ஒருவராக அறிமுகமானார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி வெகு அழகாக சித்தரித்தது இந்தப்படம். தொடர்ந்து டி.ராஜேந்தர் இயக்கத்தில் இரயில் பயணங்களில் படத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். அடுத்து மோகன், பூர்ணிமா ஜெயராம் நடித்த கிளிஞ்சல்கள் படத்தில் நடித்து அசத்தினார் திலீப்.

தொடர்ந்து மலையாளப்படங்களிலும் நடித்து அசத்தினார். அங்கு கதாநாயகனாகவும் நடித்தார். கன்னடப்படத்திலும் அறிமுகமான முதல் படத்திலேயே நாயகனாக அறிமுகமானார். நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் படிக்காத பண்ணையார், கமலுடன் தூங்காதே தம்பி தூங்காதே, ரஜினியின் மாப்பிள்ளை, தர்மதுரை, வள்ளி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

Actor dilip

அதே போல நடிகர், இயக்குனர் என தாய்மார்கள் மத்தியில் பேராதரவைப் பெற்ற விசுவின் ஆஸ்தான நடிகராக திலீப் இருந்தார். எஸ்.வி.சேகர், விசு, ஊர்வசி நடிப்பில் வெளியான ஊருக்கு உபதேசம் என்ற படத்தில் நடித்து அசத்தினார் திலீப். இந்தப்படம் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது.

தொடர்ந்து 1988ல் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் இயக்கத்தில் நடித்து திலீப் அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

இதில் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் பெர்னான்டஸ் என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய கிஷ்முவின் மகனாக நடித்திருந்தார். தொடர்ந்து பெண்மணி அவள் கண்மணி என்ற படத்தில் சீதாவின் கணவராக நடித்து தாய்மார்களின் பேராதரவைப் பெற்றார்.

dileep

தொடர்ந்து விசுவின் மாப்பிள்ளை சார், சகலகலா சம்பந்தி, வேடிக்கை என் வாடிக்கை, சிகாமணி ரமாமணி என பல படங்களில் நடித்தார். நவரச நாயகன் கார்த்திக்குடன் சொல்லத்துடிக்குது மனசு படத்தில் நடித்தார்.

ராமராஜனுடன் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடித்தார். எங்கள் சாமி ஐயப்பன், ஓம் சக்தி என பக்திப்படங்களிலும் நடித்தார். ஹேமா என்பவரை மணம்புரிந்தார். ஒரு மகனும், மகளும் உள்ளனர். திரையுலகை விட்டு வெளியேறி சென்னையிலிருந்து கர்நாடகாவுக்கு இடம்பெயர்ந்தார். இவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர் 2012ல் உடல்நிலை மிகவும் மோசமாகி காலமானார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top