Connect with us

Cinema History

ஹாலிவுட்டில் கலக்கிய தமிழ் நடிகர்கள்.., தனுஷ், ஜிவி-ஐ தாண்டிய டாப் 10 லிஸ்ட் தெரியுமா உங்களுக்கு.?

தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வெவ்வேறு மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அங்கும் கால் தடம் பதித்தவர்கள் பலர் இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே தனது நடிப்பு திறனை நாடு கடந்து வெளிநாட்டு படங்களிலும் நடித்து அங்கும் பெயர் பெற்றனர்.  அப்படி தனது நடிப்பால் ஹாலிவுட்டை ஈர்த்தவர்களின் லிஸ்ட்  இதோ..,

எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு எதிராக வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி, பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியவர் எம்.என்.நம்பியார். இவர் அந்த காலத்திலேயே ஹாலிவுட்டில் தடம் பதித்துவிட்டார். இவர் 1952ஆம் ஆண்டு நம்பியார் தி ஜங்கிள் (The jungle) எனும் ஹாலிவுட் படத்தில் மஹாராணியின் மந்திரியாக நடித்து இருந்தார்.

அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவர் தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, தெலுங்கு, என வேற்று மொழிகளில் நடித்து வெற்றிக்கொடி நாட்டியபோதே, 1988ஆம் ஆண்டு பிளட் ஸ்டோன் எனும் ஆங்கில படத்தில் நடித்து மிரட்டி இருப்பார்.

தற்போது வரை சாக்லேட் பாய் எனும் பெயர்க்கு சொந்தராகராக வலம் வருகிறார் மாதவன். இவர் தமிழில் 2000ஆம் ஆண்டு அலைபாயுதே- வில் நடிப்பதற்கு முன்னரே 1997ஆம் ஆண்டு இனஃபெர்னோ எனும் அமெரிக்க திரைப்படத்தில் இந்திய போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பார்.

இவரை இந்த லிஸ்டில் பலர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கிராமத்து கதைக்களங்களில் பின்னி பெடலெடுத்தவர். நகரத்து கதைக்களங்களை கூட அதிகம் தேர்வு செய்யாத நெப்போலியன் ஹாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். 2019ஆம் ஆண்டு டெவில்ஸ் நைட், ஜிவி.பிரகாஷ் நடித்து வரும் டிராப் சிட்டி ஆகிய படங்களிலும் நடித்து உள்ளார்.

வில்லத்தனமான வேடமானாலும் சரி, குணசித்திர வேடமானாலும் சரி சிறப்பாக செய்து முடிப்பவர் பிரகாஷ் ராஜ். இவர் 1993ஆம் ஆண்டு ட்ராபிகல் ஹீட் (Tropical heat) எனும் படத்திலும், 2010ஆம் ஆண்டு வெளியான காண்டி பிளிப் (candyflip) ஆகிய படஙக்ளில் நடித்துள்ளார்.

தமிழில் விஜயின் தமிழன் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பே வாட்ச் ( BayWatch) ஏ கிட் லைக் ஜேக் (A kid like jake) போன்ற பல படங்களில் பிரியங்கா சோப்ரா நடித்துளளார். அதே போல, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்த தபு ஹனுமான் போன்ற வெளிநாட்டு படங்களிலும் நடித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்தில் நடித்து இருந்த பூஜா குமார், ஆரம்பத்தில் நிறைய ஆங்கில படஙக்ளில் நடித்துள்ளார்.  2003இல் ஃபிளேவர்ஸ் (Flavours), 2012ஆம் ஆனது மேன் ஆஃப் தி லெட்ஜ் (Man of the ledge) ஆகிய படஙக்ளில் நடித்துள்ளார்.

இருவர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் 2004ஆம் ஆண்டு பிரைட் ஆஃப் ப்ரீஜூடிஸ்  (pride and prejudice),  The Mistress of Spices, pink pink panther 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்களேன் – அதிராவுக்கு அட்வான்ஸ் கொடுத்த தளபதி67 டீம்.! கே.ஜி.எப் ‘அந்த’ விஷயத்தை உங்ககிட்ட சொல்லயா.!

ஜி.வி.பிரகாஷ் ட்ராப் சிட்டி எனும் படத்தில் மருத்துவராக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி விட்டது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் பற்றி கூறாமல் இருக்க முடியாது. தி எக்ஸ்ட்ரானரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர் எனும் பிரென்ச் படத்தில் படத்தின் நாயகனாகவே நடித்து விட்டார். அதன் பிறகு, அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் தி கிரே மேன் எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

google news
Continue Reading

More in Cinema History

To Top