ஆங்கிலம் பேசி அசத்திய தமிழ்சினிமா நடிகர்களின் பட்டையைக் கிளப்பிய படங்கள் - ஒரு பார்வை

தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் அந்தக் காலத்தில் இருந்தே தொடர்கிறது. இது உலக மொழியாக உள்ளதால் பேசுவதற்கு ஆர்வம் அதிகரிக்கிறது. அதனால் தான் ஆங்கிலம் பேசுவதை ரசிகர்கள் ரொம்பவே ரசிக்கிறார்கள்.

அட நம்ம தலைவரா இப்படி இங்கிலீஷ் பேசுறார்னு மூக்கின்மேல் விரலை வைப்பார்கள். அது ஒரு ஆனந்த ஆச்சரியம். அப்படி யார் யார் கெத்து காட்டி ஆங்கிலம் பேசிய தமிழ் நடிகர்கள்னு பார்ப்போமா....

சிவாஜி கணேசன்

இவர் தமிழ்த்திரை உலகின் சிம்மசொப்பனம். இவர் பேசுவம் வசனமே அதற்கு சாட்சி. கம்பீரமாகத் தொனி இருக்கும். உச்சரிப்பு, அழுத்தம் என அம்சமாக இருக்கும் இவரது வசனநடை. அதற்கேற்ப இவரது பாடி லாங்குவேஜ் நம்மை அசர வைத்துவிடும். காட்சியோடு பின்னிப் பிணைத்துவிடும்.

போலீஸ் அதிகாரி என்றால் ஒரு மிடுக்கு. செல்வந்தர் என்றால் கம்பீரம். ஒரு அலட்சியம். சிகரெட்டை ஸ்டைலாகப் பிடித்து தோளை ஒரு குலுக்கு குலுக்கும்போது ரசிகன் புல்லரித்துப் போவான். பணக்காரத் தோரணையுடன் யதார்த்தமாக ஆங்கிலம் பேசுவது நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.

Gowravam

கௌரவம் படத்தில் பைப்பை வாயில் வைத்துக் கொண்டு அட்டகாசமாக ஆங்கிலம் பேசுவார்.

உயர்ந்த மனிதன் படத்தில் யு அன்கிரேட்புல் டெவில் என்று ஆங்கிலம் பேசி சிவகுமாரை ஆத்திரத்துடன் அடிப்பார். விளையாட்டுப்பிள்ளை, தெய்வமகன், ஞானஒளி, நெஞ்சிருக்கும் வரை, வியட்நாம் வீடு, கீழ்வானம் சிவக்கும், பாட்டும் பரதமும் என பல படங்களில் சிவாஜி அனாயசமாக ஆங்கிலம் பேசி அசத்துவார்.

கமல்ஹாசன்

Kamal, Sivaji

தேவர் மகன் படத்தில் கலெக்டருடன் கமல் பேசும் ஆங்கிலம் அழகோ அழகு. ஹேராம் படத்திலும், சகலகலா வல்லவன் படத்திலும் இவர் பேசும் ஸ்டைலான ஆங்கிலம் செமயாக இருக்கும்.

தசாவதாரம் படத்தில் கமல் வெள்ளைக்காரனாக நடித்து இருப்பார். அதற்கு அவர் பிரிட்டன் இங்கிலீஷ் பேச வேண்டியது இருந்தது. அதை ஸ்டைலாக நுனிநாக்கில் பேசுவதற்கு மகள் சுருதிஹாசன் தான் கற்றுக்கொடுத்தாராம். படத்தில் அந்த அளவு செம ஸ்பீடாக ஆங்கிலத்தில் பேசி அசத்தியிருப்பார் உலகநாயகன்.

ரஜினிகாந்த்

Rajni, Senthil

இவர் ஆங்கிலம் பேசினாலும் ஸ்டைல் தான். அதிலும் குறிப்பாக வேலைக்காரன் படத்தில் இவர் பேசும் ஐ கேன் டாக் இங்கிலீஷ் வசனம் இன்று வரை ட்ரெண்ட்டாகவே உள்ளது. தமழைக்கூட ஆங்கில ஸ்டைலில் அசத்தலாகப் படபடவென பேசும் அழகு சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே உரித்தானது.

படத்தில் இந்த சீனைப் பார்க்கும் போது நாம் விழுந்து விழுந்து சிரித்து விடுவோம். அவ்வளவு தமாஷாக இருக்கும். அதாவது இங்கிலீஷ் பேசுறதுல நல்லா பேசுறதும் உண்டு. ஓட்டை இங்கிலீஷ் பேசுறதும் உண்டு. படத்தில் இது இரண்டாவது ரகம். அதனால் தான் பட்டி தொட்டி எங்கும் அந்த இங்கிலீஷ் பட்டையைக் கிளப்பியது.

ஜெமினிகணேசன், வி.எஸ்.ராகவன், ஏ.ஆர்.எஸ் என பலரும் படங்களில் ஆங்கில வசனம் பேசி அசத்தியுள்ளனர்.

நடிகைகளில் சௌகார் ஜானகி, ஜெயலலிதா, லட்சுமி பானுமதி உள்பட பலரும் ஆங்கிலம் பேசி அசத்தியுள்ளனர்.

 

Related Articles

Next Story