1. Home
  2. Cinema News

துப்பாக்கிய வாங்கிட்டா கோலிவுட்டுக்கே ராஜாவா? ஆடு பட இயக்குனருக்கே அல்வா கொடுத்த கடவுள் நடிகர்..


Kollywood: தற்போது ஹீரோக்கள் எல்லாம் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதில் அவர்களுடைய முந்தைய படங்களின் வசூல் மற்றும் வெற்றியை கணக்கு போட்டு வருகின்றனர். தற்போது அந்த நிலை இயக்குனர் ஒருவருக்கும் நேர்ந்திருப்பதாக தகவல்கள் கசந்து இருக்கிறது.

சமீபத்தில் கோலிவுட் உச்ச நடிகரை வைத்து ஆடு திரைப்படத்தை இயக்கி இருந்தார் இசை வீட்டு இயக்குனர். எப்போதும் போல ரிலீசுக்கு முன்னால் குடும்பமே சேர்ந்து பேட்டி கொடுத்து ஓவர் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கி கடைசியில் பல்ப் வாங்கியது என்னவோ உண்மை.

ரசிகர்களை ரசிக்க வைக்க படத்தையே மீம் மெட்டீரியலாக மாற்றி வைத்தனர். இது ஒரு புறம் இருக்க தன்னுடைய அடுத்த பட கடவுள் நடிகரை அவர் ஆசைக்காக ஒரு காட்சியில் களம் இறக்கினார். அந்த காட்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரலாக மாறியது.

உச்ச நடிகர் அரசியலுக்கு செல்ல இருக்கும் நிலையில் அவருடைய இடத்தை யார் பிடிக்க போகிறார் என்ற கேள்வி கோலிவுட்டில் எண்ணமும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் பல வருடங்களாக மிகப்பெரிய போராட்டங்களை செய்து வெற்றி படங்களை குவித்த மாஸ் ஹிட் நாயகர்கள் இன்னும் லைனில் இருக்கின்றனர்.

ஆனால் அவர்களை பின் தள்ள தன்னுடைய நரி தந்திரத்தை வைத்து கடவுள் நடிகர் காட்சி நடித்ததன் மூலம் தன்னை கோலிவுட் அடுத்த உச்சநட்சத்திரமாக அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் அவருக்கு அடுத்து வெளியாக இருக்கும் ராணுவ திரைப்படமும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

ஆனால் இதற்கு முக்கிய காரணமாக இருந்த அந்த இசை வீட்டு இயக்குனருக்கு அல்வா கொடுத்திருக்கிறார். ராணுவ படத்தை முடித்துவிட்டு இந்த இயக்குனருடன் சேர்வதாக தான் பேச்சுவார்த்தை இருந்ததாம். ஆனால் தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படத்தை உச்ச நட்சத்திரத்தின் ஆஸ்தான இயக்குனருடனும், இவருக்கு ரவுடி படம் இயக்கிய அந்த ராஜா இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள கலெக்ஷன் எல்லாம் கணக்கு பண்ணி இயக்குனரை தூக்குறது இவருக்கு தேவையா என ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.