More
Categories: Cinema News latest news

சம்பளமே முக்காவாசி முழுங்கிட்டா படத்த எப்படி எடுக்க?!.. தலைவர் 170, தளபதி 68-ல் நடப்பது இதுதான்!..

Thalaivar 170: சினிமா உலகை பொறுத்தவரை குறைவான பட்ஜெட்டில் படமெடுத்து அதிக லாபத்தை பார்ப்பதுதான் தயாரிப்பாளரை வாழ வைப்பதோடு, சினிமாவையும் வளமாக வைத்திருக்கும். அதற்கு நேர் எதிராக கோடிகளை கொட்டி அதிக பட்ஜெட்டில் படமெடுத்து குறைந்த லாபத்தை பார்ப்பது என்பது வளர்ச்சிக்கு உதவாது.

ஆனால், இப்போது தமிழ் சினிமாவில் அதுதான் அதிகம் நடக்கிறது. மலையாளத்தில் மோகன்லாலின் சம்பளம் ரூ.8 கோடி முதல் ரூ.17 கோடி வரை மட்டுமே. அதேபோல், மம்முட்டியின் சம்பளம் ரூ.10 கோடிக்கும் கீழ்தான். மம்முட்டியின் மகன் துல்க சல்மானின் சம்பளம் ரூ.8 கோடி மட்டுமே. இவர்களுக்கே இதுதான் சம்பளமெனில் மற்ற சின்ன நடிகர்களின் சம்பளம் மிகவும் குறைவு. அதனால்தான் கேரளாவில் சிறந்த கதையம்சம் கொண்ட நிறைய திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: சின்ன யு.. பெரிய ஏ!.. லியோ படத்தோட தரமான சம்பவம்!.. அந்த அப்டேட் கிங் சொன்ன செம மேட்டர்!..

அதேபோல்தான் தெலுங்கிலும். மிகவும் குறைவான சம்பளத்தை பெற்று வந்த அல்லு அர்ஜூன் புஷ்பா ஹிட்டுக்கு பின்னரே ரூ.100 கோடியை தாண்டியிருக்கிறார். பாகுபலி, பாகுபலி2 இரண்டும் படத்திற்கும் சேர்த்து 4 வருடங்கள் நடித்த பிரபாஸ் வாங்கிய சம்பளம் ரூ.25 கோடி. அந்த படங்களின் வெற்றிக்கு பின் இப்போது ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறார். இவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் படமெடுக்க 300 கோடிக்கும் மேல் தனியாக செலவு செய்கிறார்கள். அதனால், அவர்கள் நடித்து வெளியாகும் படங்கள் தரமாக உருவாகிறது.

ஆனால், தமிழில் அப்படியில்லை. ஒரு படத்தின் பட்ஜெட்டில் 80 சதவீதத்திற்கு மேல் ஹீரோவின் சம்பளத்திற்கே போகிறது. ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தின் பட்ஜெட் ரூ.165 கோடி. இதில் ரஜினியின் சம்பளம் மட்டுமே ரூ.90 கோடி, மற்ற நடிகர்களின் சம்பளம் ரூ.45 கோடி. மீதியிருக்கும் 30 கோடியில்தான் படமே எடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஓவர் சீன் போடாதீங்க!.. நாங்க இல்லாம நீங்க இல்ல!.. விஜய் மீது காண்டான பயில்வான் ரங்கநாதன்…

இதாவது பரவாயில்லை. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கான சம்பளம் ரூ.200 கோடி என சொல்லப்படுகிறது. அவர்களும் ரூ.30 கோடியில்தான் படமெடுக்க செலவு செய்வார்கள். ஹீரோக்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக்கொண்டால் அந்த செலவை படத்தை தரமாக தயாரிக்க தயாரிப்பாளர் செலவு செய்ய முடியும். ஆனால், அது இங்கே நடப்பதே இல்லை. ஹீரோக்களும் அதைபற்றி கவலைப்படுவதில்லை.

தளபதி 68 படத்தில் விஜய்க்கு அதிக சம்பளம் என்பதால் அவரை தவிர அந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் என எல்லோருக்கும் பாதி சம்பளம் கொடுப்பதாக பேசி வருகிறார்கள். அப்போதுதான் செலவை குறைத்து கொஞ்சமாவது லாபத்தை பார்க்க முடியும் என தயாரிப்பாளர் தரப்பு கணக்குப்போடுகிறது. விஜய் படம் என்பதால் அவர்களும் இதற்கு சம்மதம் சொல்லும் நிலையில் இருக்கிறார்கள்.

பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் மட்டுமே முக்கியம் என சில தயாரிப்பாளர்கள் நினைக்கும் வரை இங்கே இது மாறப்போவதில்ல என பொங்குகிறார்கள் சினிமா பத்திரிக்கையாளர்கள்.

இதையும் படிங்க: தலைவர் 170 பூஜை போட்டாச்சு!.. ரஜினி பக்கத்துல பாருங்க நம்ம துணிவு ஹீரோயின் தூளா நிக்குறாங்க!..

Published by
சிவா

Recent Posts