கவர்ச்சியே காட்டாமல் ரசிகர்களைத் தன் நடிப்பால் கட்டிப் போட்ட நாயகிகள்… இப்படியும் இருக்காங்களா?

Published on: December 31, 2023
KSNMPPS
---Advertisement---

அந்தக்காலத்தில் அதாவது 30 வருடங்களுக்கு முன் கவர்ச்சிக்கு என்று ஜெயமாலினி, சில்க், டிஸ்கோ சாந்தி, அனுராதா என பலர் இருந்தனர். அதனால் கதாநாயகிகள் அளவாகக் கவர்ச்சி காட்டினார்கள். ஆனால் இப்போது கவர்ச்சி நாயகிகளுக்கு வேலையே இல்லை. அந்த வேலையை கதாநாயகிகளே திறம்படச் செய்துவிடுகின்றனர்.

ஆனால் கவர்ச்சியை நம்பாமல் நடிப்பை மட்டும் நம்பியும் பல நடிகைகள் தமிழ்ப்படங்களில் நடித்தனர். அவர்களில் ரேவதி, சங்கீதா, சித்தாரா என ஒரு சில நடிகைகள் அடங்குவர். தற்போதுள்ளள நடிகை பட்டியலில் இவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்கள் யார் யார் என பார்ப்போம்.

இதையும் படிங்க… ஹீரோவ மட்டும்தான் கவனிப்பீங்களா?… மேக்கப் மேனிடம் ரஜினி சொன்ன அந்த விஷயம்…

கீர்த்தி சுரேஷ்

இவரது காந்தம் போன்ற கண்களும், வெகுளித்தனமான சிரிப்புமே ரசிகர்களைக் கட்டிப் போட்டது. இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானார். ஆனால் படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. அதன்பிறகு ரஜினி முருகன் படத்தில் நடித்தார். பட்டி தொட்டி எங்கும் இவர் தெரிய ஆரம்பித்தார்.

தொடர்ந்து ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம் என இவர் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென தனியிடம் பிடித்தார். கவர்ச்சி நாயகிகளின் மத்தியில் நடிப்பு நாயகி ஆகி விட்டார்.

இதையும் படிங்க… அஜித்தோடு ஒரே மோட்டிவ் இதுதான்! சினிமாவை விட சுற்றுப்பயணத்தில் ஆர்வம் இருக்க காரணம் இதுதானா?

 

நித்யா மேனன்

பெங்களூரைச் சேர்ந்தவர். நூற்றெண்பது, வெப்பம், உருமி, காஞ்சனா 2, இருமுகன், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரும் கவர்ச்சியை நம்பாமல் நடிப்பை நம்பி திரையுலகில் குதித்துள்ளார். இவர் நடிகை மட்டும் அல்லாமல் பின்னணிப் பாடகியாகவும் உள்ளார். இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் இவரது ஆசையாம். படங்களில் தனது கேரக்டர்களைப் பார்த்துத் தான் நடிக்க ஒப்புக் கொள்வாராம்.

பிரியா பவானி சங்கர்

திருச்சிற்றம்பலம், கடைக்குட்டி சிங்கம், களத்தில் சந்திப்போம், கசடதபற, மான்ஸ்டர், யானை உள்பட பல படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் கவர்ச்சியே காட்டாமல் நடித்து ரசிகர்களைத் தன் நடிப்பால் கவர்ந்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கமலின் மனைவியாக நடிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இந்தியன் படத்தில் சுகன்யா நடித்தது போல இவர் முதுமை மற்றும் இளமை தோற்றங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஏற்கனவே இவர் பாய்ஸ் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.