இந்த கொரோனா வந்ததால் நிறைய பிரச்சனைகளை தமிழ் திரையுலகம் சந்தித்து விட்டது. அதிலும் முக்கியமாக தியேட்டர் அதிபர்கள் தான் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வந்துள்ளனர் என்றே கூறவேண்டும். அந்தளவுக்கு அதிகமாக மூடிவைக்க பட்ட ஸ்தாபனம் என்றால் அது தியேட்டர் தான்.
அதனால் , தியேட்டர் அதிபர்களே, பெரிய ஹீரோ படங்களை கேட்டு வங்கும் நிலைமைக்கு வந்துவிட்டனர். அதனால் சிறிய பட்ஜெட் படங்களை யாரும் கண்டுகொள்வது கூட இல்லை. அதனால் சிறிய படங்களின் நிலைமை கவலைக்கிடமானது.
இதனை பயன்படுத்தி தான் OTT நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து சிறிய பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்தனர். நிலைமையை புரிந்து கொண்டு பெரிய ஹீரோக்கள் கூட OTT பக்கம் கவனம் திருப்பி வெற்றி அடைந்தனர். சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா, ஓ மன பெண்ணே, பயணிகள் கவனிக்கவும் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இதையும் படியுங்களேன் – அடுத்த பாக்ஸ் ஆபிஸ் ‘டான்’ SK தான்.! அடித்து நொறுக்கிய முதல் நாள் வசூல்..,
ஆனால், இதனை புரிந்துகொள்ளாமல், பெரிய படங்களின் பசி தெரியாமல், சிறிய படங்களும் தியேட்டருக்கு படையெடுக்க கடைசியில் நல்ல படங்கள் கூட மக்களிடம் சேராமல் தோல்விப்படங்களாக மாறியது தான் மிச்சம்.
அப்படி தான் விதார்த் நடிப்பில் கார்பன், ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் விசித்திரன், அசோக் செல்வன் நடிப்பில் ஹாஸ்டல் , கூகுள் கூட்டப்பா போன்ற நல்ல படங்களை OTTயில் நல்ல லாபத்திற்கு விற்றுஇருந்தால் கூட நல்ல லாபம் கிடைத்திருக்கும் என்று சினிமாவாசிகள் கூறுகின்றனர்.
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…