அபூர்வமான தலைப்புகளுடன் வெளியான தமிழ்சினிமா படங்கள் ஓர் பார்வை
தமிழ்சினிமாவின் தலைப்புகள் அந்தக்காலத்தில் மிகவும் பேசும் பொருளாக இருந்தது. தலைப்பைப் பார்த்து தான் படம் பார்க்கவே செல்வார்கள். தலைப்புகளும் ஏனோ தானோவென வைக்க மாட்டார்கள்.
ஆழமான பொருள் பொதிந்தும் படத்தின் மையக்கருத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்திருக்கும். அதனால் படத்தின் தலைப்புக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்த வகையில் அபூர்வமான தலைப்புகளுடன் கூடிய சில தமிழ்ப்படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் அதாவது 1947ல் வெளியானது இந்தப்படம். டி.ஆர்.சுந்தரம் இயக்கியுள்ளார். ஜி.ராமநாதனின் இன்னிசை படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இந்தப்படத்திற்கு கதை எழுதியவர் கவிஞர் பாரதிதாசன். இவர் தான் வசனம் மற்றும் பாடல்களையும் எழுதியுள்ளார்.
பி.எஸ்.கோவிந்தன், என்.ஆர்.சுவாமிநாதன், காளி என்.ரத்னம், எம்.ஜி.சக்கரபாணி, வரலட்சுமி, வி.என்.ஜானகி உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு புதிரான திகில் படம். படத்தில் அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்க முடியாத வண்ணம் த்ரில்லிங்காக இருக்கும்.
அபூர்வ ராகங்கள்
1975ல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் உருவான படம். கமல், ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த், ஜெயசுதா, நாகேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார்.
அதிசய ராகம், கைகொட்டி சிரிப்பார்கள், கேள்வியின் நாயகனே, ஏழு ஸ்வரங்களுக்குள் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. அதிசய ராகம், கெகொட்டி சிரிப்பார்கள், கேள்வியின் நாயகனே, ஏழு ஸ்வரங்களுக்குள். கேள்வியின் நாயகனெ ஆகிய பாடல்கள் உள்ளன.
அபூர்வ சகோதரிகள்
1983ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஆர்.தியாகராஜன். ஜெய்சங்கர், கார்த்திக், கே.ஆர்.விஜயா, ராதா, சுஹாசினி, ஊர்வசி, தேங்காய் சீனிவாசன், பேபி ஷாலினி உள்பட பலர் நடித்துள்ளனர்.
பப்பி லஹரி இசை அமைத்துள்ளார். அன்னை என்னும் ஆலயம், எங்கெங்கே நீதம், என்னை யாரும் தொட்டதில்லை, மன மோகனமே, நல்லதுக்கு காலமில்லை, ஒன்றே எங்கள் தேவன் ஆகிய பாடல்கள் உள்ளன.
அபூர்வ சகோதரர்கள்
1989ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடங்களில் நடித்து கலக்கியிருப்பார். அவற்றில் ஒன்று குள்ள கமல். இந்த வேடத்தில் எப்படி குள்ளமாக நடித்தார் என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.
அவருடன் இணைந்து ஜெய்சங்கர், நாகேஷ், கௌதமி, ரூபினி, மனோரமா, ஸ்ரீவித்யா, ஜனகராஜ், மௌலி, டெல்லிகணேஷ், நாசர் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். கிரேசி மோகனின் திரைக்கதை மற்றும் வசனம் படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.
200 நாள்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். ராஜா கைய வச்சா, புதுமாப்பிள்ளைக்கு, உன்ன நெனச்சேன், வாழவைக்கும் காதலுக்கு ஜே, அண்ணாத்தே ஆடுறார் ஆகிய பாடல்கள் இப்படத்தில் உள்ளன.
அபூர்வ நாகம்
1991ல் வெளியான இந்தப்படத்தை சோழராஜன் இயக்கியுள்ளார். நிழல்கள் ரவி, கௌதமி, ஜெய் கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.
நாகத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இந்தப்படத்தில் உள்ள அபூர்வ நாகம் என்ன செய்கிறது என்பதை வெண்திரையில் கண்டு மகிழுங்கள்.