More
Categories: Cinema News latest news

இவங்களுக்குள்ள இப்படி ஒரு வில்லத்தனமா?.. வில்லனாக மிரட்டிய நகைச்சுவை நடிகர்கள் பற்றிய ஒரு பார்வை!..

தமிழ் சினிமாவில் எத்தனையோ வில்லன் நடிகர்கள் மிரட்டி விட்டு போயிருக்கின்றனர். தன்னுடைய கம்பீரமான குரலாலும் விறைப்பான தோற்றத்தாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பல நடிகர்களை திரையில் பார்க்கும் போதே நமக்கு ஒரு வித பய உணர்வு தோன்றும்.

ஆனால் அவர்களுக்குள் உண்மையாக ஒரு நல்ல குணம் தான் ஒழிந்திருக்கும். உதாரணமாக நம்பியாரை எடுத்துக் கொண்டால் அவரை பார்க்கும் சின்னக் குழந்தைகள் கூட அழுது விடுவார்கள். அந்த அளவுக்கு அவர் கண்ணை உருட்டி உருட்டி காட்டி பயமுறுத்தியிருக்கிறார். ஆனால் இயல்பாகவே நம்பியார் எந்த வித கெட்டப்பழக்கத்திற்கும் ஆளாதவர்.

Advertising
Advertising

இப்படி தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கிய பிரபல நடிகர்கள் பலரும் வில்லன் அவதாரம் எடுத்து அனைவரையும் மிரள வைத்திருக்கின்றனர். அப்படி யார் யாரெல்லாம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றனர் என்பதை தான் பார்க்க போகிறோம்.

நடிகர் நாகேஷ் : நகைச்சுவையில் இன்றளவும் நாகேஷை பின் தள்ளியவர்கள் யாரும் வரவில்லை. தன் பாவனைகளாலும் உடல் அசைவுகளாலும் நகைச்சுவை சொட்ட பேசும் வசனங்களாலும் அனைவரையும் கவர்ந்தவர் தான் நாகேஷ். ஹீரோவாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நகைச்சுவை நடிகராக மட்டுமே மக்கள் இவரை பார்த்தனர். அப்படிப்பட்ட நாகேஷ் அபூர்வ சகோதரர்கள் என்ற கமல் படத்தில் மோசமான வில்லனாக நடித்திருப்பார். சில படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது.

நடிகர் கவுண்டமணி : காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் திரை உலகில் தோன்றிய கவுண்டமணி ‘ராஜாத்தி ரோஜாக்கிளி’ என்ற படத்தின் மூலம் தான் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் நடிகை அனுராதாவுடன் கவர்ச்சி நடனமும் இந்தப் படத்தில் ஆடியிருப்பார் கவுண்டமணி. இதே போல் முள் இல்லாத ரோஜா, 16 வயதினிலே போன்ற படங்களில் வில்லனாக தோன்றி மிரள வைத்திருக்கிறார் கவுண்டமணி.

நடிகர் தேங்காய் சினிவாசன்: தமிழ் சினிமாவில் ஒரு நல்ல மனிதராக வலம் வந்தார் தேங்காய் சீனிவாசன். சினிமாவில் ஏராளமான படங்களில் தன்னுடைய வித்தியாசமான குரலில் அனைவரையும் சிரிக்க வைத்து நடித்திருப்பார். இவரின் கெரியரில் மிகவும் பேசப்பட்ட படமாக ‘காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படம்
அமைந்தது.அந்த படத்தில் இவரின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அதே தேங்காய் சீனிவாசன் ஒரு ப்ளாக்மெயில் போட்டோகிராபராக சரியான வில்லன் கதாபாத்திரத்தில் மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.

நடிகர் தங்கவேல் : நகைச்சுவை ஜாம்பவான் என்றே தங்கவேலுவை கூறலாம். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் அதிகம் காணப்படும் நடிகராக வலம் வந்தார். கோமாளித்தனமான பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்திர்ப்பார். பணம் பதி பக்தி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற படங்களில் பேராசையுடன் எதிர்மறையான கேரக்டர்களில் நடித்த கே.ஏ.தங்கவேலு மிகச்சிறந்த வாய்மொழி நகைச்சுவை நடிகர்.

இதே வகையில் டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, வி.எஸ்.ராகவன் போன்ற காமெடி நடிகர்களும் கதைக்கு தேவைப்படும் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றனர்.

இதையும் படிங்க : கடுப்பான விஜய்!.. லியோ படத்துக்கு வந்த சிக்கல்!. இப்படி கட்டைய போட்டா என்னதான் பன்றது!..

Published by
Rohini

Recent Posts