Cinema News
தானா வந்த மாஸ் ஹிட் படங்களை தட்டி விட்ட நடிகர்கள்… டம்மி பீஸாக மாறிய காமெடி! இதுக்கு பேரு தான் கொழுப்பு!
Tamil Heros: சில நடிகர்களுக்கு வரும் வாய்ப்புகளை யோசிக்காமல் தட்டிவிட்டு பின்னர் ஒரு வெற்றி கூட கிடைக்காமல் அவர்கள் திரை கேரியரையே நாசம் செய்து விடுவார்கள். அதை தொடர்ந்து சும்மா ஒரு படத்தினை செய்துக்கொண்டு நானும் நடிக்கிறேன் என ரீதியில் சுற்றி வருவார்கள். அப்படி ஒரு சுவாரஸ்ய பட்டியல் தான் இங்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஜெய்: பகவதி படத்தின் மூலம் விஜயுடன் எண்ட்ரி ஆன ஜெய். தொடக்கத்தில் நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இவருக்கு முதலில் கிடைத்த பட வாய்ப்புகள் விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி, ராட்சசன். இந்த அருமையான படங்களை வேண்டாம் எனக் கூறிவிட்டு கனிமொழி, கோவா, வாமனன் போன்ற ப்ளாப் படங்களை கொடுத்தார்.
இதையும் படிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…
சாந்தனு: பாக்கியராஜின் மகனாக பெரிய எதிர்பார்ப்புடன் எண்ட்ரி கொடுத்தவர். முதன்முதலில் பாய்ஸ் படத்தில் முன்னா படத்தில் நடிக்க சாந்தனுவை தான் நாடி இருக்கின்றனர். ஆனால் பாக்கியராஜ் என்னுடைய மகன் ரொம்ப சின்ன பையன். மீசையே இல்லை என நோ சொல்லிவிட்டாராம். அடுத்து காதல் படத்தின் வாய்ப்பை ரொம்ப லவ் படமா இருக்கு வேண்டாம் சொல்லி விட்டாராம்.
பிரசாந்த்: விஜய், அஜித்துக்கே டஃப் கொடுத்த பிரசாந்த் இன்று மார்க்கெட்டிலே இல்லாமல் போனார். ஒரு கட்டத்தில் விஜயின் 68வது படத்தில் அண்ணனாக நடிப்பதாக சேதி. இவருக்கு கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் வாய்ப்பு வந்து இருக்கிறது. கதை ஓகே ஆனால் தபுக்கு ஜோடியா நடிக்க முடியாது. ஐஸ்வர்யா தான் ஜோடியா வேண்டும் என அடம் பிடித்தாராம்.
இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜியை கோபப்படுத்திய கண்ணதாசன் பாட்டு!.. நடந்தது இதுதான்!..
மின்னலே படத்தில் நடிக்க பிரசாந்தினை நாடி இருக்கிறார். ஆனால் கதையில் இந்த விஷயத்தினை மாத்துங்க. ரீமாசென்னுக்கு பதில் வேறு நடிகை வேண்டும் என அடம் பிடித்திருக்கிறார். கௌதம் மேனன் நீங்களே வேண்டாம் என்ற ரீதியில் டாட்டா காட்டி விடுகிறாராம்.
அப்பாஸ்: இன்று தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என தவமாய் இருக்கும் அப்பாஸ் தனது சினிமா வாழ்க்கையில் மிஸ் செய்த முக்கிய படம் ஜூன்ஸ் தானாம். அந்த கதையை கேட்ட அப்பாஸ், நான் 12 படத்திற்கு அட்வான்ஸ் வாங்கி இருக்கிறேன். அதை முடித்துவிட்டு தான் இதில் நடிப்பேன் என்றாராம். போப்பானு ஷங்கர் கிளம்பிவிட்டார். அடுத்து காதலுக்கு மரியாதை பட வாய்ப்பும் அப்பாஸுக்கு தான் வந்ததாம். ஆனால் மனேஜரின் தவறான முடிவால் அந்த வாய்ப்பும் போனது.