கடலம்மா...கடலம்மா முத்துக்கடலம்மா....! கடல் பெயரில் வெளிவந்த படங்கள் - ஓர் பார்வை

பரந்து விரிந்த அந்த நீலக்கடலைப் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு அகன்ற பார்வை வரும். எவ்வளவு அழகான உலகம்? இறைவன் இத்தனை அழகாக படைத்திருக்கிறானே...நாம் ரசிக்கலாம் அல்லவா என்று அந்த இயற்கை அன்னையின் கொடையான கடலை நாம் கண்டு ரசித்து மனதை லேசாக்கிக் கொள்வோம்.

இதற்காகத் தான் அடிக்கடி மக்கள் பொழுது போக்கு என்ற பெயரில் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்க அவ்வப்போது கடலோரம் வந்து ஓய்வெடுத்து அந்தக் கடலன்னையின் அற்புதமான அழகை கண்ணாற ரசித்து விட்டுச் செல்கின்றனர். அந்த வகையில் தமிழ்ப்படங்கள் கடலைக் காட்டுவதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு பல படங்களை வெளியிட்டுள்ளன.

கடலை படத்தில் ஏதாவது ஒரு பாடல் காட்சியிலாவது காட்டுவதை நாம் பார்த்திருப்போம். நிலாவே வா படத்தில் கடலம்மா கடலம்மா முத்துக்கடலம்மா...என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா என்று ஒரு சூப்பர் ஹிட் பாடல் உண்டு. இப்போது கடல் பெயரிலேயே வெளியான சூப்பர்ஹிட் படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

சமுத்திரம்

Samuthiram

2001ல் சரத்குமார், முரளி இணைந்து நடித்து வெளியான மாபெரும் வெற்றிச்சித்திரம். கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார்.

மணிவண்ணன், கவுண்டமணி, மனோஜ், மோனல், சார்லி, மனோபாலா, அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர். சபேஷ் முரளி இசை அமைத்துள்ளார்.

கடல்

Kadal1

மணிரத்னம் இயக்கிய இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கைப் போடு போட்டது. கௌதம் கார்;த்திக், துளசி, அர்ஜூன், அரவிந்த் சாமி, தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். 2013ல் வெளியானது.

பசுபதி, பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். அறிமுகப்படத்திலேயே நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும், நடிகை ராதாவின் மகள் துளசி நாயரும் முத்தாய்ப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடல் பூக்கள்

பாரதிராஜாவின் அழகிய படைப்பு இந்த கடல் பூக்கள். தேவாவின் ரம்மியமான இசை படத்திற்கு பிளஸ் பாயிண்ட். முரளி, மனோஜ், பிரதியுஷா, சிந்து, உமா, ஜனகராஜ், சந்தான பாரதி, வையாபுரி, ஜோதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

கடலோரக்கவிதைகள்

Kadalora kavithaigal

1986ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பாரதிராஜா. பெயருக்கு ஏற்றாற்போல படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் எல்லாமே செம ஹிட்.

சத்யராஜ், ரேகா, ராஜா, ஜனகராஜ், கமலா கமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். அடி ஆத்தாடி, தாஸ் தாஸ் சின்னப்பதாஸ், கொடியிலே மல்லியப்பூ, பொடி நடையா, போகுதே போகுதே ஆகிய பாடல்கள் உள்ளன.

கடல் மீன்கள்

kadal meengal

கமல் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய படம். 1981ல் வெளியானது. நாயகன் ராஜன் தன் தாயுடன் வசித்து வருகிறான். இளமைப்பருவம் முதல் மீன் பிடிப்பது இவன் தொழில். தாய் மீது அளவு கடந்த பாசம் கொண்டவன். தன் தந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமும், நேரமும் இல்லாதவன்.

ஒருநாள் இவனுடன் தகராறு செய்யும் சிலர் அப்போது தான் தன் தந்தை யார் என்பதைக் கேட்கிறான். பணக்காரன் செல்வநாயகம் தான் அவன் தந்தை என்பதைத் தெரிவிக்கிறான்.

தன் தாய்க்கு செய்த கொடுமைக்கு, அவனை பழிவாங்க புறப்படுகிறான். தன் கணவனும், மகனும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வதை தாய் கண்ணீரோடு கவனிக்கிறாள்.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it