இது உழைக்கும் வர்க்கம்....என்றும் நேர்மையின் பக்கம்....தொழிலாளி வரிசையில் சிறப்பு சேர்த்த படங்கள்
முதலாளி... தொழிலாளி வர்க்கம் அன்று முதல் இன்று வரை ஒரு சர்ச்சைக்குரிய பொருளாகவே பார்க்கப்படுகிறது. முதலாளி நல்லா இருந்தா தொழிலாளி வம்பு பண்றவங்களா இருக்குறாங்க. தொழிலாளி நல்லவங்களா இருந்தா முதலாளி கறார் பார்ட்டியாக இருக்கிறார்.
இதைத் தான் பல படங்களில் காட்டியுள்ளனர். எப்பவுமே முதலாளி வர்க்கம் தான் தலைகனத்தோடு இருப்பார்கள் என்று சித்தரிக்கும் தமிழ்;ப்படங்கள். அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
தொழிலாளி
அசோகன் கம்பெனியின் முதலாளியாக இருப்பார். கொஞ்ச காலம் அவர் அமெரிக்கா போயிருப்பார். அந்த நேரத்தில் கம்பெனியின் தொழிலாளியான எம்ஜிஆர் அங்கு அவரது பொறுப்பைக் கவனித்துக்கொள்வார். திரும்பி வரும் அசோகன் எம்ஜிஆரிடம் பொறுப்பை திரும்பவும் ஒப்படைக்கச் சொல்வார்.
இப்போது போனஸ் போடும் நேரம் என்பார். யாரைக் கேட்டு போனஸ் போடற...உன் சொந்தக் கம்பெனின்னு நினைச்சியான்னு அசோகன் கேட்பார். அதற்கு எம்ஜிஆர் சொந்தக்கம்பெனின்னு நினைச்சி எல்லோரும் வேலை செய்ததால தான் நாம 2 பஸ் ரூட்டும், 5 பஸ்களும் வாங்கியிருக்கோம்னு சொல்வார்.
கம்பெனிக்கு லாபம் வரும்போது போனஸ் கொடுப்பதில் என்ன தவறு இருக்குன்னு கேட்பார். தொழிலாளிகள் அனைவரும் எம்ஜிஆரின் பக்கம் நின்று உரக்க முதலாளி ஒழிகன்னு சொல்வாங்க. அப்போதும் எம்ஜிஆர் அப்படி யாரும் சொல்லாதீங்க. அவரை வச்சித்தான் நாம எல்லோருக்கும் வேலை கிடைச்சிருக்கு.
அதனால அவர் ஒழிகன்னு சொல்லாதீங்க. அதுக்குப் பதிலா வேற வார்த்தையைப் பயன்படுத்துங்கன்னு சொல்லிட்டு முதலாளி திருந்தணும்னு சொல்லுங்கன்னு சொல்வாரு. அதுதான் எம்ஜிஆர். அவரது படங்களில் வசனங்கள் பளிச்சென்று இருக்கும். அவரது கொள்கை, எண்ணத்தால் உயர்ந்த உத்தமர் என்பதைக் காட்டும். படத்தில் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் காட்சிகளில் இதுவும் ஒன்று.
நானும் ஒரு தொழிலாளி
1986ல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம். கமல், அம்பிகா, ஜெய்சங்கர், ராஜீவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் செம மாஸ். லூஸ்மோகன், வி.எஸ்.ராகவன், தீபா, தேவிகா, கே.விஜயா உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தில் கமல் தொழிலாளியாக வந்து கலக்கு கலக்கு என கலக்கியிருப்பார். ஒரு நிலவு மலரும், பட்டுப்பூவே, செம்பருத்தி பூவே, நான் பூவெடுத்து ஆகிய பாடல்கள் உள்ளன. தொழிலாளியின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார் கமல்.
மன்னன்
1992ல் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் படம். பி.வாசு இயக்கியுள்ளார். குஷ்பு, விஜயசாந்தி, மனோரமா, பண்டரிபாய், கவுண்டமணி, விசு உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
ராஜாதி ராஜா, சண்டி ராணியே, அடிக்குது குளிரு, அம்மா என்றழைக்காத, கும்தலக்கடி ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படத்தில் ரஜினி
தொழிலாளியாக வருகிறார். விஜயசாந்தி முதலாளியாக வருகிறார். இருவருக்கும் இடையே செம போட்டி. செம மாஸ் சீன்கள். படத்தின் மாபெரும் வெற்றிக்கு இதுதான் காரணம்.
உழைப்பாளி
1993ல் பி.வாசுவின் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம்.
ரஜினிகாந்த், ரோஜா, ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், நிழல்கள் ரவி, மயில்சாமி, விஜயகுமார், விவேக், கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர். தமிழரசனாக வரும் ரஜினிகாந்த் ஒரு உண்மையான உழைப்பாளியாக வந்து ரசிகர்களின் உள்ளங்களில் குடியேறுகிறார்.
பாசமலர்
சிவாஜிகணேசன் ஒரு மில் தொழிலாளியாக வருகிறார். ஜெமினிகணேசன் கம்பெனி முதலாளி. இருவருக்கும் இடையில் நடக்கும் காரசார விவாதம் படத்தின் துவக்கக்காட்சியில் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. அண்ணன், தங்கை பாசம் படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கிறது.
சிவாஜி, ஜெமினிகணேசன், சாவித்திரி உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை படத்தில் பாடல்களுக்கு மெருகூட்டின.
பாட்டொன்று கேட்டேன், யார் யார் யார் அவள், மலர்களைப் போல், அன்பு மலர், எங்களுக்கும் காலம் வரும், மயங்குகிறாள் ஒரு, மலர்ந்தும் மலராத ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
மில் தொழிலாளி
ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தில் 1991ல் வெளியான படம் மில் தொழிலாளி. ராமராஜன், ஐஸ்வர்யா உள்பட பலர் நடித்துள்ளனர்.
தேவாவின் இசை படத்தில் செம மாஸ். ஜெய்சங்கர், ரஞ்சன், சந்திரசேகர், ஏ.வி.ரமணன், கிருஷ்ணாராவ், குமரிமுத்து, செந்தில், கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர்.