தமிழ்சினிமாவில் டெரர்ரான டைட்டில்கள் - ஓர் பார்வை
படத்தைப் பார்க்கும் போது ஒரு டெரர் வேண்டும் என்பதற்காகவே படத்தின் பெயர்களை ஆயுதங்களாக வைத்து எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நாம் ஒரு சில படங்களின் வரிசையைப் பார்க்கலாம்.
கத்தி
2014ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம். விஜய், சமந்தா இணைந்து நடித்த படம். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ரகம்.
விவசாயத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். பக்கம் வந்து , செல்பி புள்ள, ஆதி, பாலம், நீ யாரோ ஆகிய பாடல்கள் உள்ளன.
துப்பாக்கி
2012ல் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய், காஜல் அகர்வால், சத்யன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. கூகுள் கூகுள், அண்டார்டிகா, குட்டி புலி கூட்டம், போய் வரவா, வெண்ணிலவே, அலைக்கா லைக்கா ஆகிய பாடல்கள் உள்ளன.
அருவா வேலு
பாரதிகண்ணன் இயக்கிய இந்த படத்தில் நாசர், ஊர்வசி, ஆனந்த் ராஜ், ராஜேஷ், நெல்லை சிவா உள்பட பலர் நடித்துள்ளனர். பி.எஸ்.பாரதிகண்ணன் கதை எழுதியுள்ளார். நாசர், ஊர்வசி, ஆனந்த்ராஜ், சிங்கமுத்து, போண்டா மணி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏகே 47 படம்
1999ல் வெளியான இப்படத்தை இயக்கியவர் ஓம் பிரகாஷ் ராவ். சிவ ராஜ்குமார், சந்தினி, ஓம் பூரி உள்பட பலர் நடித்துள்ளனர். ஹம்சலேகா இசை அமைத்துள்ளார். படம் வெளிவந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை.
குத்து
2004ல் வெளியான சிலம்பரசன் படம். எ.வெங்கடேஷ் இயக்கிய இந்தப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். ரம்யா, ரம்யா கிருஷ்ணன், கலாபவன் மணி, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். அசானா அசானா, குத்து குத்து, பச்சைக்கிளி, நிபுணா நிபுணா, போட்டுத்தாக்கு, என்னைத் தீண்டி விட்டாய் ஆகிய பாடல்கள் உள்ளன.
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
1998ல் வெளியான இந்தப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கினார். மன்சூர் அலிகான், பொன்னம்பலம், கீர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். வாசகன் இசை அமைத்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து
2018ல் தான் இப்படி ஒரு படம் வந்தது. சந்தோஷ்பி ஜெயக்குமார் இயக்கிய இந்தப்படத்திற்கு பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார். கௌதம் கார்த்திக், யாசிகா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளன.