latest news
நீங்க பேசாம தமிழ்ப்படம் 3-ஐயே எடுத்திருக்கலாம் சி.எஸ். அமுதன்!.. ரத்தம் விமர்சனம் இதோ!..
ஹாலிவுட் படங்களில் ஸ்பூஃப் படங்கள் பிரபலமான நிலையில், தமிழில் தமிழ்ப்படம் என்றே ஸ்பூஃப் செய்து இரு படங்கள் எடுத்து ரசிகர்களின் கவனத்தை திருப்பிய இயக்குநர் சி.எஸ். அமுதன் தமிழ்ப்படம் 2 சரியாக போகாத நிலையில், பல ஆண்டுகள் ஆள் அட்ரஸே இல்லாமல் இருந்த நிலையில், த்ரில்லர் படமாக ரத்தம் படத்தை பல ஆண்டுகளாக கிண்டி தற்போது ஒரு வழியாக ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். கண்ணன் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: எலி பட இயக்குநரின் இந்த படம் வென்றதா? கொன்றதா?.. இறுகப்பற்று விமர்சனம் இதோ!..
மீடியாக்களில் வரும் விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் ஸ்டோரிக்கள் மூலமாக பாதிக்கப்படும் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை எப்படி சூசைட் ஸ்குவாடாக மாற்றுகின்றனர் என்கிற கதையை படமாக உருவாக்கி நம்மை பயமுறுத்தாமல் பரிதாபப்பட வைத்துள்ளார்.
இவர் இயக்கிய காமெடி படங்களையாவது அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவுக்காக ஒரு முறை பார்க்க முடிந்தது. ஆனால், விஜய் ஆண்டனியை வைத்து அவருக்கு வில்லியாக மஹிமா நம்பியாரை போட்டு மரண டார்ச்சர் கொடுத்து ரசிகர்கள் காதிலும் கண்ணிலும் ரத்தம் வர வைத்துள்ளார்.
இதையும் படிங்க: லியோவுக்கு முன்னாடியே கல்லா கட்டுவாரா திரிஷா?.. தி ரோட் திரைப்படத்தின் விமர்சனம் இதோ!..
கதை வித்தியாசமாக இருந்தாலும், அதீத கற்பனையாகவே தெரிகிறது. அப்படியெல்லாம் பண்ண இந்நேரம் ப்ளூ சட்டை மாறன், சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் இருந்திருக்கவே மாட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
பிரபல பத்திரிகை நிறுவனத்தில் உள்ளே புகுந்து அதன் எடிட்டரையே இளைஞர் ஒருவர் கொன்று விடுகிறார். அந்த கொலைக்கு அவர் மட்டும் காரணமில்லை. அவரை இப்படியொரு கொடூர கொலையை செய்ய தூண்ட பின்னால் இருந்து நெகட்டிவ் பப்ளிசிட்டியையும் இளைஞர்கள் நெஞ்சத்தில் நெகட்டிவிட்டியை விதைக்கும் கொடூர வில்லியாக மஹிமா நம்பியார் இருப்பதையும் அவங்களுக்கான மோட்டோ என்ன? இந்த கொலைக்கு காரணமானவர்களை விஜய் ஆண்டனி கண்டு பிடிக்க என்ன காரணம் என்பது தான் இந்த ரத்தம் படத்தின் கதை.
இளைஞர்களை தவறான பாதைக்கு செல்ல தூண்டுகின்றனர் என அஜித்தை வைத்து வலிமை படம் எடுத்தே ஓடவில்லை. விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் என்ன ஆகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ்ப்படம் 3 எடுங்க சி.எஸ். அமுதன் என்கிற கோரிக்கை அதிகம் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரத்தம் – ரணம்!
ரேட்டிங் – 2.5/5.